கசந்த காதல்..டல்லடித்த லிவ்இன்! ஐடி ஊழியருக்கு அல்வா கொடுத்த காதலன்! ஊர்மக்கள் முன் பெண் செய்த செயல்
ராமநாதபுரம்: பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ராமநாதபுரத்தில் காதலர் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து லிவின் உறவில் இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்து தலைமறைவானதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், கதறி அழுது கண்ணீர் விட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரியை சேர்ந்தவர் இளம்பெண் சரஸ்வதி. இவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு இவருடன் பணிபுரியும் தோழி ஒருவரின் நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கோபி வேலூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் பெங்களூரில் லிவின் உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. இவர் திருமணம் செய்து கொள்வதாக கோபி உறுதி அளித்ததன் பேரில் கணவன் மனைவி போல வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோபி இந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டு செல்போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியாமல் தப்பியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இளம் பெண் சரஸ்வதி இது தொடர்பாக வேலூரில் காவல் நிலையத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்ததாக கூறினார். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திலும் ஏற்கனவே புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய அந்த இளம் பெண் நேற்று ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் 5வது தெருவில் உள்ள காதலன் கோபியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
இவர் வந்ததை அறிந்த கோபியின் அப்பா ராமு, அம்மா லதா ஆகியோர் இவரை வீட்டுக்குள் விடாமல் வாசலலிலேயே இடையே நிற்க வைத்து விட்டு வீட்டை பூட்டிக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து இளம் பெண் சரஸ்வதி காதலன் கோபி வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அந்த பகுதியில் கூடினார். தகவல் அறிந்து அங்கு வந்த கேணிக்கரை போலீசார் இளம்பெண்ணோடு பேச்சுவார்த்தை நடத்தி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.
ஏற்கனவே புகார் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காவல் நிலையத்துக்கு அந்த பெண் வர மறுத்தார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த இளம் பெண் தன்னை அந்த வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து கணவன் மனைவி போல வாழ்ந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து தலைமறைவான தகவலை கூறி அந்த பெண் காதலன் வீட்டு வாசலில் அமர்ந்து கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications