என்னது இபிஎஸ் வாழ்கவா? எந்த ***வேணா இருந்துட்டு போ! பசும்பொன்னில் விரட்டப்பட்ட மாஜி ஆர்பி உதயகுமார்?
இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60வது குருபூஜை விழாவும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவானது அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
28ஆம் தேதியான இன்று ஆன்மீக விழாவாகவும் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் 30ந்தேதி அரசு விழாவாக நடைபெறும். இவ்விழாவில், தமிழக முதல்வர்,எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

தேவர் ஆன்மீக விழா
அதன்படி இன்று முதல் நாள் நிகழ்ச்சியாக ஆன்மிக விழா துவங்கியது. இவ்விழாவில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான புரோகிதர்கள் தேவர் நினைவிடத்தில் கணபதிஹோமம் மற்றும் வருஷாபிஷேகமும் மற்றும் கும்பாபிஷேகம் யாகசாலையில் பூஜை தொடங்கப்பட்டு தேவரின் திருவுருவ சிலை மற்றும் விநாயகர் முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனையுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ஆர்பி உதயகுமார்
நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக எதிர்கட்சி துணை தலைவராக அறிவிக்கப்பட்டவருமான ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆன்மீக விழாவில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சிலர் 'அண்ணன் ஆர்பி உதயகுமார் வாழ்க, எடப்பாடியார் வாழ்க, கழக பொதுச்செயலாலர் எடப்பாடியார், வருங்கால முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வாழ்க' என நினைவிடத்திற்குள்ளேயே முழக்கமிட்டனர்.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் ஆர்பி உதயகுமார் உள்ளே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது வெளியே இருந்த மற்றொரு தரப்பினர் எடப்பாடி வாழ்க என்ற முழக்கத்தால் திடீர் கோபம் அடைந்தனர். ஆர்பி உதயகுமார் உள்ளே இருக்கும்போதே வெளியில் இருந்த சிலர் ' யார் அது எடப்பாடி பழனிசாமி என முழக்கமிட்டது. இது கோயில் அரசியல் களம் அல்ல அமைச்சராக இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி, வந்தோமா சாமி கும்பிட்டோமா சென்றோமா? என இருக்க வேண்டும் எடப்பாடி வாழ்க என்றெல்லாம் முழக்கம் இடக்கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆர்பி உதயகுமாரை கண்டித்தும் கடுமையாக பேசி நிலையில் அங்கிருந்த சிலர் அவர்களை சமாதானம் செய்தனர்.

விரட்டப்பட்டாரா?
அதே நேரத்தில் ஆர்பி உதயகுமாரை அங்கிருந்து விரட்டப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கமிட்டதால் ஆர்பி உதயகுமாருக்கு எதிர்ப்பு மட்டுமே தெரிவித்ததாகவும், அதன் பிறகு ஆர்பி உதயகுமார் நிர்வாகிகளை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன ஆர் பி உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் மட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வராததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications