உண்டியல் கிட்ட அசைந்த சிவபக்தையின் கை.. ராமேஸ்வரம் கோயில் வீடியோவில் அந்த காட்சி! பிரபா மானமே போச்சு
ராமநாதபுரம்: பக்தர் என்ற போர்வையில் புனிதமான இடத்திலேயே அரங்கேறிய ஒரு சம்பவம் ஒட்டுமொத்த பக்தர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.. அதுவும் பெண்கள் மீது சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கும் வகையில், இந்த பெண் செய்த காரியம் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இறை பணியில் தங்களை இணைத்துக் கொண்டவர்களே இப்படியா? என்று பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.. என்ன நடந்தது, ராமேஸ்வரத்தில்?
காசிக்கு நிகரான புனித தலமாகவும், தென்னகத்தின் ஆன்மிகக் கருவூலமாகவும் திகழ்வது ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலாகும்..

ராமநாதசுவாமி திருக்கோயில்
இந்த கோயில் உலக ஃபேமஸ் என்பதால், நாட்டின் எட்டு திசைகளிலிருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்..
அதிலும் விசேஷ காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் லட்சங்களை தொட்டுவிடுமாம்.. இந்த அளவுக்கு இக்கோயிலில் கூட்டம் நிரம்பி வழிய காரணம் பக்தர்களின் அதீத நம்பிக்கைதான்..
தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மனநிம்மதி வேண்டியும் வரும் பக்தர்கள், இறைவன் மீது கொண்ட தீராத பக்தியால் தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்கள் உட்பட ஏராளமான பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவது வழக்கமாக வைத்துள்ளார்கள்..
ராமேஸ்வரம் கோயில் உண்டியல்
இப்படி சேரும் காணிக்கைகள் அனைத்தும் மாதந்தோறும் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் முறைப்படி எண்ணப்படும்...
இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மட்டுமல்லாமல், ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்ட தன்னார்வலர்கள், பள்ளி மாணவிகள், வெளிமாவட்ட ஆன்மீகக் குழுவினரும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான கோயில்களில் இப்படித்தான் உண்டியல் பணம் எண்ணப்பட்டு வருகிறது..
அந்த வகையில், கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் தொடங்கியது.
பிரபாவின் கண்கள்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த கைலாசநாதர் - சிவகாமசுந்தரி ஆன்மிக அன்பர் குழுவை சேர்ந்த சுமார் 118 பேர் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்... அந்த கூட்டத்தில் ஒருவராக வந்தவர்தான் பிரபாவதி..
துறையூர் ஆளத்துடையான் பட்டியைச் சேர்ந்தவர்.. 40 வயதாகிறது.. கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டே காணிக்கை எண்ணும் பணியில் அனைவரும் தீவிரமாக இருந்தனர். ஆனால், பிரபாவதியின் கண்கள் மட்டும் பணக்கட்டுகளின் மீது ஒருவித தவிப்புடன் சுழன்று கொண்டிருந்தன... அவரால் உண்டியல் பணத்தை எண்ணவும் முடியவில்லை.. ஒருவித தவிப்பிலேயே இருந்தார்..
அவரது ஒவ்வொரு அசைவையும் கோயில் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன... ஆனால் இது தெரியாத பிரபாவதி, ஒரு நொடியில், எண்ணி கொண்டிருந்த ரூபாய் நோட்டுக்கட்டுகளில் ஒரு பகுதியை லபக்கென்று லாவகமாக எடுத்து தன்னுடைய ஆடைக்குள் பிரபாவதி மறைத்து வைத்து கொண்டார்..
ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 670 ரூபாய்
ஆனால் கேமராவையும் தாண்டி, அங்கிருந்த கண்காணிப்பு அதிகாரிகளே இந்த செயலை நேரில் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தனர்.. உடனடியாக கலாவதியை பிடித்து அலுவலகத்திற்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில், அவர் தனது ஆடையில் மறைத்து வைத்திருந்த ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 670 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பிறகு கலாவதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. கடந்த 6 மாதங்களாகவே இத்தகைய ஆன்மீக குழுக்கள் வாயிலாக தொடர்ந்து கோயில் உண்டியல் எண்ணும் பணிக்கு சென்று வருகிறாராம்.. கடந்த டிசம்பர் மாதம் மணிகண்டன் என்ற கோயில் தூய்மைப் பணியாளர் இதேபோல காணிக்கை திருட்டில் ஈடுபட்டுத் தலைமறைவான நிலையில், இப்போது ஒரு பெண்ணே இத்தகைய செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவபக்தையே இப்படியா
இறைவனுக்கு படைக்கப்பட்ட காணிக்கையை, இறைப்பணிக்கு வந்தவரே திருடிய இந்தச் சம்பவம் ராமேசுவரம் வரும் பக்தர்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் கோயில் இணை ஆணையர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில், இப்போது பிரபாவதி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்...
இந்த பிரபாவதி ஒரு சிவபக்தையாம்... இப்படி சொல்லியே ஆன்மீக குழுக்களிடம் வலிய சென்று தொடர்பு வைத்து கொண்டதும் தற்போது அம்பலமாகி உள்ளது.. !!
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications