கொரோனா நிவாரணத்திற்காக.. சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த 10 வயது சிறுமி
சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியரின் மகளான சிறுமி ஒருவர், தனது சேமிப்பு தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்தவர் தனியார் நிறுவன தொழிலாளி செல்வகுமார்(45) . இவரது மகள் ஜெசிகா (10). வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

மூன்றாம் வகுப்பிலிருந்து, பெண் கல்வி ஊக்கத்தொகையாக அரசு வழங்கிய ரூ. 1,500 மற்றும் சேமிப்பில் வைத்திருந்த ரூ.1,006 சேர்த்து, மொத்தம் ரூ. 2,506 தொகையை காசோலையாக (DD) எடுத்து, கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி ஆய்விற்காக, சேலம் வந்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், இன்று இந்த சிறுமி நேரில் வழங்கினார்.

தனது குடும்பத்திற்கு சொந்த வீடு, நிலம் ஏதும் இல்லாத நிலையில் இருந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோரை மீட்க, தமிழக அரசு நிவாரண நிதிக்கு, தனது எதிர்காலத்திற்காக அரசு தந்த தொகையையும், தனது சேமிப்பையும் சேர்த்து வழங்கிய அரசு பள்ளி மாணவி ஜெசிகாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications