ரோடு எங்கே இருக்கு, கிணறு எங்கே இருக்கு! எப்படி விழுந்திருக்கு பாருங்க இந்த கார்! 2 பேர் பரிதாப பலி
சேலம்: சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில், தருமபுரி அருகே, வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலைதடுமாறி சாலையிலிருந்து சில அடி தூரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது மூழ்கியது.
Recommended Video
இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் பரிதாபமாக பலியாகினர். இது தொடர்பான பரபரப்பூட்டும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா (42). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சேலம் மாவட்டம்
வீராவின் மனைவி உமாலட்சுமி (32), மகள் சுஷ்மிதா (13). 7ம் வகுப்பு மாணவி. உமாலட்சுமி தங்கை வீடு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ளது. அங்கு தனது கணவர் மற்றும் மகளுடன் உமா லட்சுமி சென்றார். அவர்கள் நேற்று மாலை தங்களது, பொலீரோ வகை மினி எஸ்யூவி கார் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.

லாரி தண்ணீர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் அந்த கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரி ரோட்டில் தேங்கி நின்ற மழைநீர் மீது ஏறிச் சென்றது. எனவே, லாரி டயரிலிருந்து மழை நீர் நாலாபுறமமும் பாய்ந்தது. அப்போது பின்னால் வந்த கார் கண்ணாடி முழுவதும் தண்ணீர் சிதறியுள்ளது. வைப்பர் போடாத நிலையில், சாலை எது என்பது காருக்குள் இருந்தவர்களுக்கு புரியவில்லை. தண்ணீர் பட்டதும், காரின் வேகத்தையும் வீரா கட்டுப்படுத்தவில்லை. அதே வேகத்தில் இயக்கியுள்ளார்.

பாதை மாறிய கார்
பாதை மாறிய கார், சாலையோரத்தில் இருந்த செவத்தான் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாய்ந்துள்ளது. அப்போது காரின் கதவு திறந்ததால் உள்ளே இருந்த உமாலட்சுமி மட்டும் நீந்தி மேலே வந்துள்ளார். அந்த பகுதியிலிருந்த மக்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற உதவி மேலே கொண்டு வந்தனர். ஆனால் அதிகமான தண்ணீர் இருந்ததால், காருக்குள் இருந்த மற்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மீட்கும் பணி
காரிமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் கால தாமதமாகிவிட்டது. தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், சம்பத்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

சிசிடிவி காட்சிகள்
தற்போது இந்த விபத்து நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சாலை மற்றும் கிணறு இருந்த இடம் பல அடி தூரமாக உள்ளது தெரிய வருகிறது. அப்படி இருந்தும் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் பாய்ந்தது பதற வைப்பதாக இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications