Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடியாத முட்டல் மோதல்..பொதுக்குழு நடக்கும் முன் வாழ்த்து போஸ்டர்.. கடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் என சேலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சேலம்: அதிமுக பொதுக்குழு கூடுமா? தன் பக்கம் சாதகமான தீர்ப்பு வருமா என்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் பதற்றத்தில் இருக்க அவரது ஆதரவாளர்களோ அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் என போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

Recommended Video

    Sasikala வேதனை! AIADMK வீணாய் போக சுயநலமே காரணம் *Politics

    அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது தலைமையை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையே முட்டல் மோதல் அதிகரித்துள்ளது.

    கடந்த மாதம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆரம்பித்த பஞ்சாயத்து இன்னமும் நீடிக்கிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் களேபரத்தில் முடிந்தது.

    போஸ்டர் யுத்தம்

    போஸ்டர் யுத்தம்

    ஒற்றை தலைமைக்கு தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அவரது ஆதரவாளர்கள் ஒரு பக்கம் போஸ்டர் ஒட்டுகின்றனர். அதே போல அம்மா அடையாளம் காட்டிய தலைவர் ஓ.பன்னீர் செல்வம்தான் கட்சி தலைமைக்கு தகுதியானவர் என தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    இந்த நிலையில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வாத விவாதங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திங்கள் காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார்.

    பொதுக்குழு நடக்குமா?

    பொதுக்குழு நடக்குமா?

    11 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் , நடைபெற உள்ள நிலையில், 9 மணிக்கு பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்குமா? பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்ற பதற்றம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை தொற்றிக்கொண்டுள்ளது.

    பொதுச்செயலாளர் வாழ்த்து போஸ்டர்

    பொதுச்செயலாளர் வாழ்த்து போஸ்டர்

    சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் டென்சனை மேலும் எகிற வைத்துள்ளதாம். சேலம் மாநகர் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் இங்கணம் சேலம் மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்றம் என குறிப்பிட்டுள்ளது இந்த போஸ்டர்கள் அம்மாபேட்டை ஐந்து ரோடு பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு கூடும் முன்பே போஸ்டர்கள் ஒட்டியது ஏன் என்று கேட்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+