மேட்டூர் அணையில் மீண்டும் 1,20,000 கன அடி தண்ணீர் திறப்பு...11 மாவட்ட கரையோர மக்களுக்கு அலர்ட்!
சேலம்: கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,20,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால், கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 2 மாதம் தொடர்ந்து கனமழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், 42 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் விரி நீர் குடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தொடங்கிய நிலையில், கபினி. கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து மற்றும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 1,00,000 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம் 23,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 11.00 மணிக்கு 1,10,000 கன அடியிலிருந்து 1,20,000 கன அடியாக உயர்ந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து 1,20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை பவர் ஹவுஸ், சுரங்கப்பாதை பவர் ஹவுஸ் மூலம் சுமார் 23000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 16 கண் பாலம் வழியாக 97,000 கன அடி திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால்சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 11 டெல்டா மாவட்டங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications