தொடரும் தாக்குதல்.. ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. சேலத்தில் பரபரப்பு!
சேலம்: சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து, மர்ம நபர்கள் இன்று அதிகாலை வீசிச் சென்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை நள்ளிரவில் வீசி விட்டு செல்வதோடு, முக்கிய பிரமுகர்களின் கார்களுக்கும் தீ வைத்து செல்கின்றனர்.
தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த சம்பவங்களால், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற மாவட்டங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர். வாகன சோதனை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், ஆங்காங்கே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

சேலம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி
அந்த வகையில், சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து, இன்று காலை மர்ம நபர்கள் சிலர் வீசிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வரும் ராஜன் என்பவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

மண்ணெண்ணெய் குண்டு
இந்நிலையில், இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீ பற்ற வைத்து, ராஜன் வீட்டில் வீசிவிட்டு அங்கிருந்த தப்பியோடிவிட்டனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் ஏற்படவிருந்த சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, எதிர் வீட்டைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், ராஜனுக்கு தகவல் கொடுத்தார்.

காவல் நிலையத்தில் புகார்
இதனையடுத்து, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ராஜன் வீட்டிக்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்த உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து, அங்குள்ள சிசிடிவி கேமிராவில் காட்சிகள் ஏதும் பதிவாகியுள்ளதா? என போலீசார் ஆய்வு செய்தனர்.

போலீசார் விசாரணை
இந்நிலையில், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளான முகமது ஆரிப் மற்றும் முகமது இஸ்லாமில் ஆகிய இருவரும் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். காவல் நிலையத்தில், சேலம் மாநகர துணை ஆணையாளர் மாடசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

சேலத்தில் பரபரப்பு
கடந்த சில தினங்களாக கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து, சேலத்திலும் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து மர்ம நபர்கள் வீசிச் சென்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications