மக்களின் அன்பால்நெகிழ்ந்து போன பதக்க நாயகன் மாரியப்பன்.. மேளதாளம் முழங்க சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
சேலம்: பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரான பெரியவடகம்பட்டியில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்தது.
Recommended Video
இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 5 தங்கம், 8 வெள்ளி உள்பட 19 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றம் வென்று சாதனை படைத்தார்.

பதக்க நாயகன் மாரியப்பன்
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடம்பிடித்துள்ளார் மாரியப்பன். கடந்த2016 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிவா நகரில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார். வெள்ளிப்பதக்கம் வென்ற பின்னர் தமிழ்நாடு வந்த மாரியப்பன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உற்சாக வரவேற்பு
இதனை தொடர்ந்து இன்று சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவடகம்பட்டிக்கு வந்தார் பதக்க நாயகன் மாரியப்பன். அப்போது காடையாம்பட்டி அருகே கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க பூக்களை தூவி மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தமிழக வீரர் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து கவுரவித்தார்

ஊர்வலம்
அதனைத் தொடர்ந்து மாரியப்பனை ஊர் மக்கள் தோலில் தூக்கியவாறு ஊர்வலமாக சென்றனர். உயர் அதிகாரிகள் பலரும் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறிய மாரியப்பன் மற்றும் அவரது தாயார் ஊர்மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த மாரியப்பன் கூறியதாவது:-

பயிற்சி அகாடமி
''பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஊர் மக்கள் கொடுத்த சிறப்பான வரவேற்பை எப்போதும் மறக்க முடியாது. சேலத்தில் பயிற்சி அகாடமி அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன்'' என்று மாரியப்பன் கூறியுள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications