எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பழி.. திசை திருப்பிய தனபால்? கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்
சேலம்: கார் டிரைவர் கனகராஜின் மரணத்துக்கு பின்னர் கனகராஜின் விபத்து வழக்கை காரணமாக வைத்து கொடநாடு வழக்கை திசை திருப்பவும், அது தொடர்பான சாட்சியங்களை கலைக்கவும் திட்டமிட்டு செயல்பட்டதாக கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி அங்கு இரவு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தது.
அத்துடன் எஸ்டேட்டில் நுழைந்து அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது. என்ன காணாமல் போனது என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை.

விபத்தில் மரணம்
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்திரகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். இதேபோல் கொடநாடு எஸ்டேட்டின் கணிணி ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

கொள்ளை வழக்கு
இதனிடையே கனகராஜ் விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பாபு கனகராஜ் இறந்த வழக்கை விபத்து வழக்கு என பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து காவலாளி மரணம், இன்னொரு காவலாளி மயமான விவகாரம், கனகராஜ் மரணம், தினேஷ் தற்கொலை என அனைத்தையும் ஒருங்கிணைத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றதில் நடந்து வருகிறது.

விசாரணை
இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோவை மண்டல ஐ.ஜி. சுதாகரன், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் உறவினர் ரமேஷ் என்பவர் ஆத்தூர் அருகே உள்ள சக்தி நகரில் வசித்து வருகிறார். கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் ரமேஷ் அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி தலைமையிலான போலீசார் நேரில் விசாரணை நடத்தினார்கள்.

கனகராஜ் கொலையா
விபத்தில் கனகராஜ் இறந்தது, கொடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்தது ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையதா? அல்லது திட்டமிட்டு நடந்த சதியா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்த 2 வழக்குகள் குறித்து போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வழக்கில் முக்கிய தகவல்கள் பெறப்பட்டு சாட்சிகள், ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.

கைது என்ன காரணம்
இதனிடையே இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஊட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான 2 பேர் மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கைதுக்கு என்ன காரணம் என்பது குறித்துவிசாரித்த போது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்த பின்னர் கனகராஜ் தனது சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் வீட்டுக்கு அடிக்கடி வந்ததாகவும், அப்போது இருவரிடமும் இந்த சம்பவங்கள் தொடர்பான சில விவரங்களை கனகராஜ் சொல்லியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

திசை திருப்பல்
அ.தி.மு.க. பிரமுகரான தனபால் ஆரம்ப காலம் முதலே எடப்பாடி பகுதியில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார். கட்சிக்குள்ளேயே இருந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வந்த தனபால் கனகராஜின் மரணத்துக்கு பின்னர் கனகராஜின் விபத்து வழக்கை காரணமாக வைத்து கொடநாடு வழக்கை திசை திருப்பவும், அது தொடர்பான சாட்சியங்களை கலைக்கவும் திட்டமிட்டு செயல்பட்டதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இரண்டுபேர் கைது
கைதான தனபால், கனகராஜ் மரணம் மற்றும் கொடநாடு சம்பவங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தி வந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை பொதுவெளியில் கூறியிருக்கிறார். இதனால் தனபாலை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் கைதான தனபால், ரமேஷ் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications