சேலம் சவுமியா.. மனைவியை அந்த கோலத்தில் பார்த்ததுமே.. குளுக்கோஸ் பாட்டிலை கையிலெடுத்த டாக்டர்! கடவுளே
சேலம்: சேலத்தில் புதுமண தம்பதிகள் செய்த காரியம், ஒட்டுமொத்த மக்களையும் நிலைகுலைய வைத்துவிட்டது.
அம்மாபேட்டை ஸ்ரீவாரி கார்டன் அருகே உள்ளது வாய்க்கால்பட்டறை.. இங்கு வசித்து வருபவர் இனியன்.. 32 வயதாகிறது.. இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
புதுமண தம்பதி: இவரது மனைவி சவுமியா.. 31 வயதாகிறது.. சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சவுமியா.. டாக்டர் இனியனும், சவுமியாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில், புதுமணத்தம்பதி இருவரும் திருவேங்கடத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், மெடிக்கல் டிரெயினிங் ஒன்றிற்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், சவுமியா வீட்டில் தனியாக இருப்பதால், அவருடன் வீட்டில் துணைக்கு யார் தங்குவது? என்ற பிரச்சனை எழுந்தது.. கடந்த 6-ம்தேதி தம்பதிக்குள் இதுவே மிகபெரிய தகராறாகவும் உருவெடுத்தது.
தகராறு: பிறகு, சவுமியா அன்றைய தினம் இரவு, தன்னுடைய ரூமுக்குள் சென்று கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டார்... மனைவி இரவு நன்றாக தூங்கட்டும் என்று நினைத்த இனியன், இன்னொரு ரூமுக்குள் சென்று தூங்கியிருக்கிறார்.
ஆனால், காலை வெகுநேரமாகியும் ரூம் கதவு திறக்காததால், பதற்றமடைந்த இனியன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார்.. அப்போதுதான் சவுமியா ஃபேனில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிகொண்டிருப்பதை கண்டு அலறினார் இனியன்.. காதல் மனைவி இறந்த அதிர்ச்சியிலிருந்து இனியனால் மீண்டு வரவே முடியவில்லை.. நாள் முழுவதும் அழுதுகொண்டேயிருந்தார்..
கொடுமை: பிறகு அன்றைய தினமே, இனியனும் வெற்று ஊசியை தன்னுடைய உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார்.. ஆனால், குடும்பத்தினர் இனியனை காப்பாற்றிவிட்டனர். இதற்கு பிறகு சேலத்திலுள்ள அவரது வீட்டிற்கு வந்தார் இனியன். மனைவியை மறக்க முடியாமல் தவித்து கொண்டேயிருந்தார். இந்த நிலையில் கடந்த 10-ம்தேதி, தன்னுடைய வீட்டில் 2-வது முறையாக விஷமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்..
ஆனால், அதில் அவர் இறக்கவில்லை.. இதனால் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய அறையில் தூங்க சென்றவர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.. இதனால் அவரது அறைக்குள் இனியனின் பெற்றோர் சென்று பார்த்தபோது, இனியன் சடலமாக கிடந்ததை கண்டு கதறி துடித்தனர்.
ரிப்போர்ட்: இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இனியனின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்தபோதுதான், இனியன் குளுக்கோஸ் பாட்டிலில், விஷ ஊசி செலுத்தி, பிறகு அந்த குளுக்கோசை தன்னுடைய உடலில் "டிரிப்ஸ்" மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மனைவி இறந்த சோகத்தில், 3 முறை தற்கொலைக்கு முயன்று, இறுதியில் தன்னுடைய உயிரை விட்டார் இனியன். மகனின் சடலத்தை கண்டு பெற்றோர் பதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது. திருமணமான ஆறே மாதத்தில் இந்த காதல் ஜோடியின் தற்கொலையானது சேலத்தை அதிர வைத்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications