For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கல் பரிசுடன் ரூ 1000 கொடுத்திருக்கலாம்.. நம்பிக்கையா இருந்திருக்கலாம்.. திமுக எம்எல்ஏ பேச்சு!

Google Oneindia Tamil News

சீர்காழி: பொங்கல் பரிசுடன் ரூ 1000 கொடுத்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கலாம் என சீர்காழி திமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து கொரோனா நிவாரணம் ரூ 4000, ரேஷன் கடையில் 14 மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கியது. அது போல் பொங்கல் பண்டிக்கைக்கு வழக்கமாக கடந்த ஆட்சியில் ரூ 2000 ரொக்கம், கரும்பு துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் திமுக ஆட்சியில் 21 பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் முழு கரும்பும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரூ 2000 ரொக்கம் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

தஞ்சை மாணவி வழக்கு.. கிறிஸ்துவத்திற்கு எதிராக பாஜக வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறது- திருமா விமர்சனம்தஞ்சை மாணவி வழக்கு.. கிறிஸ்துவத்திற்கு எதிராக பாஜக வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறது- திருமா விமர்சனம்

21 பொருட்கள்

21 பொருட்கள்

இது குறித்து சமூகவலைதளங்களில் கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால் அரசு பரிசுத் தொகையை கொடுக்கவில்லை. 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் கொடுத்தது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் நிலையில் உள்ளது.

சீர்காழி திமுக எம்எல்ஏ

சீர்காழி திமுக எம்எல்ஏ

இந்த நிலையில் பொங்கலுக்கு பரிசுத் தொகை கொடுக்காதது நகர்ப்புற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என திமுக நம்புகிறது. தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகள் பேசும் என்றும் தெரிவிக்கிறது. ஆனால் சீர்காழி திமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம் கட்சி தலைமையின் எண்ணத்திற்கு எதிராக பேசியுள்ளார்.

சீர்காழி எம்எல்ஏ பேச்சு

சீர்காழி எம்எல்ஏ பேச்சு

சீர்காழியில் நகர பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர் செல்வம் பேசுகையில் சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும் வேட்பாளருக்கு போட்டியாக திமுகவை சேர்ந்தவர்கள் சுயேச்சையாகவோ வேறு எந்த வகையிலும் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு எதிராக செயல்படக் கூடாது.

100 சதவீதம்

100 சதவீதம்

இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்த்தது போல் பொங்கல் பரிசு தொகை ரூ 1000 கொடுத்திருந்தால் நாம்தான் 100 சதவீதம் நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திருக்கலாம் என கூறி அரங்கையே அதிர வைத்தார்.

English summary
Seerkazhi MLA PaneerSelvam says that If we would have given Rs 1000 as Pongal gift, then we will win 100% in Urban local body election 2022.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X