Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 நாள் தான் தங்கலாம்.. சிங்கப்பூரிலும் விரட்டியடிக்கப்படும் கோத்தபய ராஜபக்சே! அகதியாக மாஜி அதிபர்!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: இலங்கையில் மக்கள் போராட்டத்தால் உயிருக்கு பயந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கு வசிக்க 15 நாளுக்கு மேல் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவும் கைவிரித்துள்ளதால் இதனால் அவர் வேறு நாட்டில் தஞ்சமடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. இதனால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து கோத்தபய ராஜபக்சே மறுத்து வந்தார்.

சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே

இந்நிலையில் கடந்த 9 ம் தேதி நாடு முழுவதும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் பயந்துபோன அவர் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ராணுவ பாதுகாப்புடன் இருந்தார். அதன்பிறகு புதன்கிழமை அவர் மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்று தஞ்சமடைந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கடிதம் அனுப்பினார். மேலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புகலிடம் கொடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

15 நாட்கள் மட்டுமே அனுமதி

15 நாட்கள் மட்டுமே அனுமதி

இந்நிலையில் தான் சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவை நீண்டகாலம் தங்கள் நாட்டில் தங்க வைக்க ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 15 நாட்கள் மட்டுமே கோத்தபய ராஜபக்சே அங்கு தங்க அனுமதி கொடுத்து இருப்பதாக அதிகாரிகள் கோத்தபய ராஜபக்சேவிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛கோத்தபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகலிடம் கோரவில்லை. அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை'' என்றார்.

வேறு நாட்டில் தஞ்சமடையும் சூழல்

வேறு நாட்டில் தஞ்சமடையும் சூழல்

முன்னதாக கோத்தபய ராஜபக்சே இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் இலங்கை மக்களுக்கு எதிராக அவருக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா விரும்பவில்லை எனவும், அவரது கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இதனால் கோத்தபய ராஜபக்சே வேறு நாடுகளில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூலை 20ல் அதிபர் தேர்தல்

ஜூலை 20ல் அதிபர் தேர்தல்

இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நேற்று பதவியேற்றார். இலங்கையில் ஜூலை 20ல் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று முதல் அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டம் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+