சீனர் மீது தாக்குதல்.. சிங்கப்பூரில் நாம் தமிழர் நிர்வாகிக்கு வாழ்நாள் தடை ஏன்? உண்மை காரணம் என்ன?
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. ஏபிபி நாடு ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.
சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி குமரேசன் என்பவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அவர் சிங்கப்பூர் செல்ல முடியாது. அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பொதுவாக சிங்கப்பூர் அரசு தமிழர்களுக்கு எதிராக இப்படி நடவடிக்கை எடுக்காது. தமிழர்களை பொதுவாக வரவேற்கும் நாடுதான் சிங்கப்பூர். ஆனால் இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தகவல்
நாம் தமிழர் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை தொடர்ந்து இவர் தடை பெற்றதாக தகவல் வெளியானது. சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் கடந்த சில காலமாகவே முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையிலேயே அக்கட்சி சார்பான பணிகளில் ஈடுபட்டதற்காக குமரேசன் தடை பெற்றதாக தகவல் வெளியானது.

நாம் தமிழர் நிர்வாகி
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி உண்மையில் நீக்கப்பட்டது ஏன், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. ஏபிபி நாடு ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டவரின் பெயர் முன்பு ஊடகங்களில் வெளியானது போல குமார் கிடையாது. திருவாரூரை சேர்ந்த குமார் என்ற நாம் தமிழர் நிர்வாகி யாரும் சிங்கப்பூரில் வேலை பார்க்கவில்லை.

சிங்கப்பூர் தடை ஏன்?
மாறாக குமரேசன் என்ற நாம் தமிழர் நிர்வாகி சிங்கப்பூரில் இருந்துள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இவர்தான் சிங்கப்பூரில் நுழைவதற்கு வாழ்நாள் தடை பெற்று இருக்கிறார். சிங்கப்பூரில் நடந்த வாக்கு வாதம் ஒன்றில் தான் வேலை பார்க்கும் இடத்தில் சீனர் ஒருவரை குமரேசன் தாக்கியதாக கூறப்படுகிறது.

உண்மை காரணம்
இது தொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது இவரின் அடையாள அட்டையை சோதனை செய்யும் போது நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அட்டை கிடைத்துள்ளது. இவரின் நாம் தமிழர் கட்சி அடையாள அட்டையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இருந்துள்ளது. இதுதான் சிங்கப்பூர் அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க காரணம். அங்கு தமிழர்களை ஒன்று சேர்க்கும் விதமாக, குழு சேர்க்கும் விதமாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

மோதல்
இந்த நிலையில் இவரின் செயல்பாடுகள், சீனருடனான மோதல் மற்றும் அடையாள அட்டையில் இருந்த பிரபாகரன் புகைப்படம் ஆகிய காரணங்களால் குமரேசன் சிங்கப்பூரில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடைய வங்கிக்கணக்குகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் முடங்கி உள்ளதால் தடை பெற்ற நாம் தமிழர் நிர்வாகி குமரேசனின் தந்தை ஏபிபி நாடு செய்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications