நிர்வாண தூக்கம்.. பேய் எனக்கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! சிசிடிவி பொருத்தியதால் சிக்கிய நபர்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி உடலில் ஆடையின்றி தூங்கிய இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளரை ரகசிய கேமரா பொருத்தி காதல் ஜோடி பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தில் உள்ள வீட்டில் கடந்த ஆண்டு மே மாதம் குடியேறினார்.
இதையடுத்து வீட்டு உரிமையாளர் அவர்களை வரவேற்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விருந்து வைத்தார். இந்த வேளையில் வீட்டு உரிமையாளர் சில விஷயங்களை அவர்களிடம் கூறினார்.

பேய் கதை கூறிய உரிமையாளர்
அதாவது, ‛‛வீட்டில் அமானுஷய சக்தி உள்ளது. பேய்கள் நடமாட்டம் இருப்பதால் அதனை கட்டுப்படுத்த அவ்வப்போது மாந்திரீக முறையில் பரிகாரம் செய்து வருகிறோம். இதற்காக அடிக்கடி தாய்லாந்து சென்று வருவேன்'' என கூறியுள்ளார். இருப்பினும் காதல் ஜோடி வேறு வழியின்றி அந்த வீட்டில் தங்கினர். இதையடுத்து அடிக்கடி அவர்கள் ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடித்துள்ளனர். குறிப்பாக வீட்டு உரிமையாளர் அவர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார்.

முத்தம் கொடுக்கும் சம்பவம்
இந்நிலையில் தான் வீட்டில் எப்போதும் அந்த இளம்பெண் மின்விளக்குகளை அணைத்து இருட்டில் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். தனியாக படுத்து இருக்கும்போது அந்த பெண்ணுக்கு யாரோ முத்தம் கொடுப்பது போன்று அவர் உணர்ந்து கண்விழித்துள்ளார். இதுபற்றி உரிமையாளர் மற்றும் காதலனிடம் கேட்டபோது அது மனபிரம்மை என கூறியுள்ளார். மேலும் வீட்டு உரிமையாளர் ஏற்கனவே பேய் இருப்பதாக கூறியதால் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

ஆடையின்றி தூங்கிய இளம்பெண்
இதற்கிடையே தான், ஒரு நாள் வீட்டில் அந்த பெண் ஆடைகள் இன்றி நிர்வாணமாக தூங்கியுள்ளார். அவரது காதலன் குளிக்க செல்வதாக கூறி சென்றார். வீட்டில் மின்விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. இந்த வேளையில் தான் அந்த பெண்ணின் வாயில் ஒருவர் முத்தம் கொடுத்ததோடு, உடலின் பாகங்களை தொட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன அவர் கண்விழித்துள்ளார். காதலன் என அவர் நினைத்தார். ஆனால் குளிக்க சென்ற காதலன் வரவில்லை.

சிசிடிவி பொருத்திய காதல் ஜோடி
மேலும் அவரது காதலனின் தலையில் முடி கிடையாது. அவரது தலை வழுக்கை தலையாகும். ஆனால் முத்தம் கொடுத்த நபரின் தலையில் அதிகளவில் முடி இருந்தது. இதனால் வீட்டு உரிமையாளரின் மீது அவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் 9 மாதங்களாக அந்த பெண் சந்தித்து வரும் பிரச்சனைக்கு தீர்வு காணவும், வீட்டு உரிமையாளரை கையும், களவுமாக பிடிக்க காதல் ஜோடி திட்டமிட்டது. இதையடுத்து வீட்டு படுக்கையறையில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தினர். இதையடுத்த உடைகள் அணிந்தே அந்த பெண் படுத்தார்.

வசமாய் சிக்கிய வீட்டு உரிமையாளர்
இந்த வேளையில் தவறான எண்ணத்தில் வீட்டு உரிமையாளர் வந்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதையடுத்து வீட்டு உரிமையாளரை காதல் ஜோடி கையும், களவுமாக பிடித்தது. மேலும் சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் சம்பவம் குறித்து காதல் ஜோடி போலீசில் புகார் செய்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் சாட்சியமாக அளித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications