Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்ன கட்டிடத்தில் 2000 டன் காய்கறி உற்பத்தி.. உலகையே வியக்க வைக்கும் சிங்கப்பூர்.. அது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: உலகின் மிக பெரிய வெர்டிகல் ஃபார்மிங் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. 5 மாடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஃபார்மிங் சென்டரில் ஆண்டுக்கு 2000 டன் காய்கறி, கீரைகளை உற்பத்தி செய்ய முடியும். ஏஐ உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெர்டிகல் ஃபார்மிங் வேளாண் துறையில் மிக பெரிய ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு சிங்கப்பூர் அடிப்படையில் ஒரு குட்டி நாடு. இங்கு நிலப்பரப்பு ரொம்பவே குறைவு. மக்கள் தொகை அதிகம். இதனால் இருக்கும் நிலப்பரப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் சிங்கப்பூர் மக்கள் கெட்டிக்காரர்கள். குறுகிய நிலத்தை வைத்துக் கொண்டே சிங்கப்பூர் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது விவசாயம்.

World s Tallest Indoor Vertical Farm Opens in Singapore that will Revolutionize Urban Farming
Photo Credit:

சிங்கப்பூர் விவசாயம்

vertical farm எனப்படும் விவசாய முறையைச் சிங்கப்பூர் இப்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. பொதுவாக விவசாயம் செய்ய அதிக இடம் தேவைப்படும். ஆனால், இந்த வெர்டிகல் ஃபார்மிங் முறையில் குறைந்த இடம் இருந்தாலே போதும். வெர்டிகல் ஃபார்மிங் என்பது பயிர்களைச் செங்குத்தாக, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக வளர்க்கும் ஒரு விவசாய முறை ஆகும், இது குறைந்த இடத்தில் அதிக மகசூல் பெற உதவுகிறது. உதாரணத்திற்கு ஒரு நூலகத்தில் எப்படிப் பல அடுக்குகளில் புத்தகத்தை அடுக்கி வைத்து இருப்பார்களோ.. அதேபோலத் தான் இதில் பயிரை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து வளர்ப்பார்கள்.

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்டில், 62.26 மில்லியன் டாலர் செலவில் 'க்ரீன்ஃபைட்டோ' (Greenphyto) என்ற விவசாயப் பண்ணைத் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 23 அடி உயரத்தில் வரை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இது உலகின் மிகப் பெரிய விவசாயப் பண்ணையாகக் கருதப்படுகிறது.

2000 டன் காய்கறி

முழுவதும் ஆடோமேடிக் ஹைட்ரோபோனிக் முறையில் இயங்கும் இந்த பண்ணை, ஆண்டுக்கு 2,000 டன் காய்கறிகளை உற்பத்தி செய்யும். முதற்கட்டமாக 200 டன் காளான், கீரை ஆகியவை உற்பத்தி செய்யப்படும் நிலையில், இது படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சிங்கப்பூரிலேயே விற்கப்படுகிறது.

எப்படி

இங்கு அமைந்துள்ள செங்குத்துப் படுக்கைகளில், பல நூறு தட்டுகளில் பிரதானமாகக் கீரை வகைகள் வளர்க்கப்படுகின்றன. பொதுவாகச் செடிகள் சூரியனில் இருந்து வரும் கதிர்களில் இருந்தே தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும். இந்தச் செடிகள் கட்டிடத்திற்குள் வளர்க்கப்படுவதால் சூரிய வெளிச்சம் கிடைக்காது. அதற்குப் பதிலாக எல்.ஈ.டி (LED) விளக்குகள் வாயிலாக அவை வளர்க்கப்படுகின்றன. செடி, கீரைகளின் வளர்ச்சியைப் பொறுத்து இந்த எல்.ஈ.டி (LED) விளக்குகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் முடியுமாம்.

அடுத்தகட்டத் திட்டம் என்ன

ஒவ்வொரு இடத்திற்கும் துல்லியமாக எந்தளவுக்கு ஒளி தேவை என்று கணக்கிட்டு, அதற்கேற்ப எல்இடி வெளிச்சம் மாற்றி அமைக்கப்படுமாம். இதன் மூலம் மின்சார நுகர்வும் சுமார் 30% குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளில்லா இந்த வளர்ச்சி அறைகளை ரோபோட்டிக் அமைப்புகள் கண்காணிக்கின்றன. அவையே கீரை வளரும் நாற்றுத் தட்டுகளை நகர்த்தி, ஏஐ சாப்ட்வேருக்கு தேவையான டேட்டாவையும் வழங்குகிறது.

இந்த வெர்டிகல் பார்மிங் முறையை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர். இந்த முறை வெற்றிகரமாக இருக்கும்பட்சத்தில் அதை மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இவை நிலம் குறைவாக இருக்கும் பல நாடுகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+