பணத்தை கொடுத்து வாங்க நினைப்பதா? எடப்பாடிக்கு எதிராக காரைக்குடியில் அதிமுகவினர் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை: பணத்தை கொடுத்து அனைவரையும் வாங்கிவிடலாம் என எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக காரைக்குடியில் அதிமுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக ஒற்றை தலைமை பதவிக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமிக்கு இணக்கமாக சென்ற ஓபிஎஸ் தற்போது ஒற்றை தலைமை பதவியை விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறார். இதனால் அதிருப்தியைடந்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை போல் ஓபிஎஸ்ஸையும் ஒதுக்கி வைத்து விட்டு அதிமுகவை கைப்பற்றும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஒட்டுமொத்த அதிமுக முன்னணி நிர்வாகிகளையும் தன் பக்கம் வைத்துள்ள ஈபிஎஸ், ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் எடுக்க போகும் நடவடிக்கைகள் குறித்து இன்று தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், நேற்று சொந்த ஊரான தேனிக்கு சென்ற ஓபிஎஸ் அவசர அவசரமாக சென்னை திரும்பினார்.
அதற்குள் அதிமுகவின் சார்பாக வெளிவந்த நமது அம்மா நாளிதழில் ஓபிஎஸ்சின் நிறுவனர் பொறுப்பை பறித்தது. அடுத்ததாக கட்சி பதிவியை பறித்து கட்சியை விட்டு நீக்கவும் சட்ட ஆலோசனைகள் நடத்தி வந்தது.
சென்னையில் திரும்பிய ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், கடந்த 14.6 .2022 முதல் தற்போது வரை அதிமுகவின் சட்ட விதி மீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதிமுக ஒன்றும் உங்க அப்பன் வீட்டு சொத்து அல்ல என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஜெயலலிதா பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கமிட்டனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரை மரியாதை குறைவாக நடத்திய குண்டர்களை கண்டிக்கின்றோம் என்றும் முழக்கமிட்டனர்.
ஓபிஎஸ் ஐயா வாழ்க என்றும் முழக்கமிட்டனர். பணத்தை கொடுத்து அனைவரையும் வாங்கிவிடலாம் என பழனிசாமி நினைப்பதாக ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications