பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கார் மீது கல்வீச்சு.. டீக்கடையில் நின்றவரை ரவுண்டு கட்டிய 50 பேர்!
சிவகங்கை : பா.ஜ.க சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கார் மீது 50க்கும் மேற்பட்டோர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிலர் வேலூர் இப்ராஹிம் கார் மீது 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வேலூர் இப்ராஹிம் போலீசில் புகார் அளித்தார். பின்னர், போலீசாரின் பாதுகாப்புடன் ராமநாதபுரம் சென்றார்.

புதுக்கோட்டையில் வேலூர் இப்ராஹிம்
காமராஜரின் 120வது பிறந்தநாளையொட்டி, புதுக்கோட்டை பா.ஜ.க அலுவலகத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்திற்கு பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இளையான்குடி
பின்னர், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் புதுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்குச் சென்றார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வழியாக காரில் ராமநாதபுரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது இளையான்குடி புறவழிச்சாலையில் சிலர் அவரை நுழையவிடாமல் தடுத்ததால் அங்குள்ள ஒரு பேக்கரியில் டீ குடிப்பதற்காக காரை நிறுத்தி இறங்கினார்.

கல்வீசி தாக்குதல்
அப்போது இளையான்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் வேலூர் இப்ராஹிமின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். திடீரென சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் வேலூர் இப்ராஹிமின் கார் கண்ணாடி உடைந்தது. அவருடன் வந்த பா.ஜ.க.வினர் சிலரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு
இந்தச் சம்பவம் குறித்து வேலூர் இப்ராஹிம் சாலை கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் எஸ்.பி செந்தில்குமார் ஆய்வு செய்தார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் இப்ராஹிம் ராமநாதபுரம் சென்றார்.
-
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம்












Click it and Unblock the Notifications