யாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி முருகன் கோவில் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவைக் காண பல லட்சம் பேர் திரள்வர்.

தேரோட்டம்

தேரோட்டம்

இந்த ஆண்டு திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். யாழ். நல்லூர் திருவிழாவின் 24-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் கந்தனின் தேரோட்டம் நடைபெற்றது.

பல லட்சம் பேர்

பல லட்சம் பேர்

அத்தனை வீதிகளிலும் பல லட்சம் மக்கள் திரண்டு நல்லூர் கந்தனை தரிசித்தனர். இத்தனை லட்சம் மக்கள் திரண்டதைப் பார்த்து இலங்கைக்கான அமெரிக்கா தூதர் அதுல் கேசப் பிரமித்துப் போய் ட்விட்டர் பதிவை போட்டிருக்கிறார்.

மிரண்டு போன யுஎஸ் தூதர்

அவர் தம்முடைய பதிவில், யாழ் நல்லூர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் நம்பிக்கை, பக்தி கலாசாரம் பிரம்மிப்பூட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

பண்பாட்டு அடையாளம்

பண்பாட்டு அடையாளம்

யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழா என்பது ஈழத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கிறது. அதனால் வெளிநாடு வாழ் புலம்பெயர் தமிழர்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lakhs of devotees thronged Srilanka's Jaffna Nallur Kandaswamy temple chariot festival.
Please Wait while comments are loading...