For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகளின் 'ஹிட்' லிஸ்டில் இருந்த மைத்ரிபால சிறிசேன.. ! 2 முறை 'ஜஸ்ட் எஸ்கேப்"!!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் இருந்து 2 முறை உயிர்தப்பியவர் மைத்ரிபால சிறிசேன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் மைத்ரிபால சிறிசேன.

இலங்கையின் 7வது அதிபராகியுள்ளார் மைத்ரிபால சிறிசேன. இவரது முழுப் பெயர் பள்ளேவத்தே கமரால-லாகே மைத்ரிபால யாபா சிறிசேன.

Maithripala Sirisena and LTTE

1951ம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த மைத்ரிபால சிறிசேன கம்யூனிச ஆதரவும் சீனா சார்புமான அரசியலைக் கொண்டவராக இருந்தார். இதனால் 1971ஆம் ஆண்டு இலங்கையில் ஆயுதம் தாங்கிய இடதுசாரிகளான ஜே.வி.பி.யினர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் அடிப்படையில் மைத்ரிபால சிறிசேனவும் கைது செய்யப்பட்டார். பின்னர் விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

அதனைத் அரசு ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கினாலும் இலங்கை சுதந்திர கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1979ஆம் ஆண்டு அக்கட்சியின் பொலநறுவை மாவட்ட செயலாளரானார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறறயாக எம்.பி.யானார். 1994ஆம் அனடு நீர்ப்பாசனத்துறை அமைச்சரானார். அதன் பின்னர் இலங்கை சுதந்திர கட்சியில் அமைச்சக முடியாத மூத்த தலைவராக உயர்ந்தார்.

2001ஆம் ஆண்டு முதல் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வரை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராகவே இருந்தார். இவரது முயற்சியால்தான் ஜே.வி.பியானது சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்தது.

2007ஆம் ஆண்டு வெலிகந்த என்ற இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். 2008 ஆம் ஆண்டு பண்டாரகம என்ற இடத்திலும் தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தாக்குதலில் இருந்து மைத்ரிபால சிறிசேன உயிர் தப்பினார்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சகட்டத்தில் இருந்த போது பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் வகித்தவர் மைத்ரிபால என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Srilanka elect-President Maithripala Sirisena narrow escaped from two LTTE assassination attempts in 2007 and 2008.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X