இலங்கை கடற்படையால் கைது செய்ய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் விடுதலை- மேலும் 6 பேர் கைது!
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. இதையடுத்து 21 தமிழக மீனவர்களும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளனர். இந்நிலையில் இன்று மீண்டும் 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அத்துமீறி ஊடுருவிய இலங்கை கடற்படை 21 மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது.

21 மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களும் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கைது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது தமிழக மீனவர்கள் 21 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனையடுத்து ஓரிரு நாட்களில் 21 மீனவர்களும் தமிழகம் திரும்ப உள்ளனர்.

ஏற்கனவே 47 பேர் விடுதலை
முன்னதாக கடந்த டிசம்பர் 18-ந் தேதி ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 56 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை, இந்திய எல்லைக்குள் ஊடுருவி கைது செய்தது. 56 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதனடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த ஜனவரி மாதம் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக மீனவர்களை இலங்கை அரசு அனுப்பி வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் 47 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.

6 மீனவர்களுக்கு சிறை
இதனிடையே இன்று இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 6 மீனவர்களை வரும் மார்ச் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்திய எல்லையை ஒட்டியுள்ள காரைநகர் கோவளம் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, 6 மீனவர்களை நாட்டுப் படகுடன் சிறைப்பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் படகினையும் இலங்கை கடற்படையினர் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின் 6 மீனவர்களையும் கொரானா, மலேரியா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் வரும் மார்ச் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆட்சியரிடம் மனு
மேலும் நம்புதாளை கிராம மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கமும் இணைந்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் இலங்கை கடற்படை விடுதலை செய்த நாட்டுப் படகுகள் சில இன்னமும் தங்கள் வசம் வந்து சேரவில்லை என்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications