இலங்கை கடற்படை புதிய தளபதி தமிழர் ட்ராவிஸ் சின்னையா பின்னணி... பரபரப்புத் தகவல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் கடற்படைக்கு புதிய தளபதியாக தமிழர் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்கு பிறகு 21வது கடற்படை தளபதியாக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1982 ல் கடற்படையில் சேர்ந்த சின்னையா, இங்கிலாந்து கடற்படை கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் கமாண்டராக பணிபுரிந்துள்ளார்.

அவர் விடுதலைப் புலிகள் தோல்விக்கு காரணமானவர். புலிகளை நேருக்குநேர் எதிர்கொண்டு பணிபுரிந்ததற்காக, இலங்கை அரசின் பல விருதுகளைப் பெற்றவர் என்பது கவனிக்கத் தக்கது.

 அடுத்தவாரம் பதவி ஏற்பு

அடுத்தவாரம் பதவி ஏற்பு

இவர் தற்போது கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதியாக இருக்கிறார். அடுத்தவாரம், இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்கிறார். இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ம் தேதியில் ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரவீந்திர விஜேகுணரத்ன தலைமை அதிகாரி

ரவீந்திர விஜேகுணரத்ன தலைமை அதிகாரி

மேலும் இலங்கை கடற்படை பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில், வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புலிகளுடன் அதிக அனுபவம்

புலிகளுடன் அதிக அனுபவம்

சென்ற 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் சேர்ந்த அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, விடுதலைப் புலிகளுடனான போரில் அதிக அனுபவங்களைக் கொண்ட ஒரே மூத்த அதிகாரி என்பதால், அவருக்கு எப்போதுமே இலங்கை கடற்படையில் தனி மரியாதைதான்.

 விடுதலைப்புலிகள் கப்பல்களை மூழ்கடித்தவர்

விடுதலைப்புலிகள் கப்பல்களை மூழ்கடித்தவர்

கடந்த 2007-2008 காலப்பகுதியில், விடுதலைப் புலிகளின் 10 ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு ட்ராவிஸ் சின்னையாவே தலைமை தாங்கியிருந்தார் இன்னொரு கூடுதல் அதிர்ச்சித் தகவல்.

 ராசபக்சே காலத்தில் வெளிநாட்டில் தஞ்சம்

ராசபக்சே காலத்தில் வெளிநாட்டில் தஞ்சம்

முன்னாள் இலங்கை அதிபர், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கல் அச்சத்தினால், நாட்டை விட்டு வெளியேறிய அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், மீண்டும் கடற்படையில் சேர்ந்தார் என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srilanka President Maithripala Sirisena today appointed the Eastern Naval Commander Rear Admiral Travis Sinniah, as new Navy Commander .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற