தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லையாம் - சிங்கள கடற்படையின் அபாண்ட பொய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடே நடத்தவில்லை என இலங்கை கடற்படை அப்பட்டமாக பொய்யை கூறியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது நேற்று இரவு இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற இளைஞர் உயிரிழந்தார்.

srilankan coastal forcerefused shoot on tamil fisher man

இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இலங்கை அரசையும் கடற்படையயும் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கைக்கான இந்திய தூதர், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை தொடர்பு கொண்டு இது குறித்து கவலை தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என கூறியிருந்தார். ஆனால் இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் சமிந்த வாலகுலகே, தமிழக மீனவர்கள் மீது நாங்கள் எந்த துப்பாக்கிச் சூட்டையும் நடத்தவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்த நாங்கள் கடற்படைக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை. அதனால் நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என மறுத்திருக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srilanka coastal spokes person told that srilankan coastal force did not shoot on tamil fisherman.
Please Wait while comments are loading...