ஆஸ்திரேலியாவில் உச்சத்தில் கொரோனா.. தேசிய அவசரநிலை சூழல்.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தேசிய அவசரநிலை போல் உள்ளதாக தலைவர்கள் கூறியுள்ளனர். மெதுவான தடுப்பூசி பயன்பாட்டுக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த வருடம் கொரோனா முதல் அலையை சமாளிக்க முடியாமல் பல்வேறு நாடுகள் திணறிக் கொண்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியா அதனை வெற்றிகரமாக கையாண்டது. இதனால்தான் ஆஸ்திரேலியாவில் கொரோனா மொத்த பாதிப்பு அதிகமாக இல்லை.
அனால் கொரோனா இரண்டாவது அலையில் டெல்டா வைரஸ் மாறுபாடு ஆஸ்திரேலியாவை பாடாய்படுத்தி வருகிறது. சிட்னி, கான்பெர்ரா ஆகிய நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

அதிகரிக்கும் பாதிப்பு
சிட்னியில் வேகமாக அதிகரித்து வரும் பாதிப்புகள் தேசிய அவசரநிலை போல் ஆகி விட்டது என்று ஆஸ்திரேலிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் தலைவர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், ' கொரோனாவை ஒரு தேசிய அவசரநிலை என்று அறிவிப்பதன் மூலம் அரசு நெருக்கடியை தவிர்க்க முடியும்.

தடுப்பூசி வேண்டும்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தேசத்தின் சார்பாக எங்களுக்கு ஒரு கடமை உள்ளது.வைரஸ் "எல்லா இடங்களிலும் வேகமாக பரவுகிறது. நாட்டின் 25 மில்லியன் மக்கள் தற்போது ஊரடங்குக்கு கீழே இருக்கின்றனர். என்வே தேசிய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். கான்பெர்ராவிற்கு அதிகமான தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறியுள்ளார்.

காரணம் என்ன?
சிட்னியில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்குள்ள 5 மில்லியன் மக்களுக்கு அக்டோபர் வரை கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணி மிக மெதுவாக நடப்பதே கொரோனா எழுச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 12 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்ட பிரதமர்
ஃபைசர் ஜாப்கள் வழங்குவதில் உள்ள சிக்கல்கள், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் ஆகியவை தடுப்பூசி போடுவதை மெதுவாக்கி இருக்கின்றன. மெதுவான தடுப்பூசி பயன்பாட்டுக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். நாம் சந்தித்த சவால்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். வெளிப்படையாக செல்வதென்றால் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் உள்ளன, சில விஷயங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications