For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்: ஒரே நாளில் நேற்று 1,65,644 பேர் வேட்பு மனுத் தாக்கல்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 1,65,644 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடி தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

1,65,644 candidate file papers

முதல் நாளில் 4, 748 பேரும், 2-ம் நாளில் 6, 433 பேரும், 3-ம் நாளில் 31, 726 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே 5-நாளான நேற்று மட்டும் 1,65,644 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று வேட்புமனுத் தாக்கல் விவரம்:

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்: 666 பேர்; ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்: 7,128 பேர்; மாநகராட்சி உறுப்பினர்: 1,433 பேர்;

நகராட்சி உறுப்பினர்: 3,982 பேர்; ஊராட்சி மன்ற தலைவர்: 31,114 பேர்; ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் : 1,12,794பேர்

கடந்த 5 நாட்களில் இதுவரை மொத்தம் 2,31,020 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

English summary
A total of 1,65,644 nominations were filed for various local body posts on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X