For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க 'மவுஸை' அசைத்தால் உலகமே அசையும்: இது ரஜினி அல்ல மோடி 'பஞ்ச்'

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மோடி தலைமையிலான மத்திய அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள வேளையில் அவர் கூறிய சிலவற்றை நினைவுகூர்வோம்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த 100 நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உரைகள் ஆற்றியுள்ளார்.

அதில் சில முக்கிய வரிகளை பார்ப்போம்.

வேலை

வேலை

நீங்கள் 12 மணிநேரம் வேலை பார்த்தால் நான் 13 மணிநேரம் பார்ப்பேன். நீங்கள் 14 மணிநேரம் வேலை செய்தால் நான் 15 மணிநேரம் செய்வேன். ஏன் என்றால் நான் பிரதமர் அல்ல பிரதான சேவகன்.

இந்தியா

இந்தியா

உலக நிறுவனங்களே நீங்கள் இந்தியா வந்து உங்கள் பொருட்களை தயார் செய்யுங்கள். பொருட்களை உலகில் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயார் செய்யுங்கள்.

மகன்கள்

மகன்கள்

பலாத்காரங்கள் பற்றி கேட்டு வெட்கி தலைகுனிகிறோம். மகள்களை கேள்வி கேட்கும் பெற்றோர் மகன்களை கேட்பது இல்லை. பலாத்காரம் செய்பவர்கள் யாருடைய மகனாகவோ தான் உள்ளார். மகன் வெளியே செல்கையில் எங்கு செல்கிறார் என்று பெற்றோர் கேட்கிறார்களா? மகன்களுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிப்பது இல்லை?

நிதி தீண்டாமை

நிதி தீண்டாமை

வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் நிதி தீண்டாமையை ஒழிக்க வேண்டும்.

சிவப்பு கம்பளம்

சிவப்பு கம்பளம்

இந்தியா வரும் தொழில் அதிபர்களுக்கு சிவப்பு டேப் அல்ல சிவப்பு கம்பளம் காத்திருக்கிறது. ஹார்டுவேர் இல்லாமல் சாப்ட்வேர் முழுமை பெறாது. அது போன்று இந்தியாவுக்கு ஜப்பான்.

மவுஸ்

மவுஸ்

பில்லி சூனியம், பாம்பாட்டிகள் இன்னும் இந்தியாவில் உள்ளார்களா என்று கேட்டார்கள். நான் கூறினேன், நாங்கள் பாம்புகளுடன் விளையாடினோம். தற்போது மவுஸுடன் விளையாடுகிறோம். நாங்கள் மவுஸை அசைத்தால் உலகமே அசையும்.

வணிகம்

வணிகம்

நான் குஜராத்தை சேர்ந்தவன் என்பதால் வணிகம் என் ரத்தத்தில் ஊறியுள்ளது.

English summary
Above is the collection of quotable quotes by PM Narandra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X