For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

போனஸ், பணிச்சுமையை குறைத்தல் உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு அக்டோபர் 28ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்தனர்.

108 Ambulance employers gets back their Strike

இந்நிலையில், தாங்கள் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை, சலுகை விடுப்புக்கான பணம் திரும்ப அளித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனவே, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம் என தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

வழக்கு ஒன்றில் தீர்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என ஏற்கனவே கடந்த ஆண்டு அறிவித்தது போலவே, இந்த ஆண்டும் அறிவித்து உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ambulance employers gets back their Strike.The indefinite strike called to highlight the 27point charter of demands of the ambulance workers. The demands include security of employees, hike in salaries, provision of facilities such as those given to government employees and better working conditions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X