ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர் : லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புபடையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள அமார்கர் பகுதியில் சோபூர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

3 Lashkar terrorists killed in Kashmir

பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புபடையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த என்கவுண்ட்டரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஜவானும் காயம் அடைந்ததாக வடக்கு காஷ்மீர் ஐ.ஜி.பி. நிதிஷ் குமார் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஏகே துப்பாக் கிகள், பிஸ்டல், கையெறி குண்டுகள் மற்றும் வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால், சோபூர் பகுதியில் நடக்கவிருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதியான அபு துஜானா பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Three terrorists have been killed in an encounter at Jammu and Kashmir. The encounter took place at Sopore in Kashmir.
Please Wait while comments are loading...