பல் தேய்க்காவிட்டால் பல நோய்கள் பறந்தோடும்.. வைரலாகும் அடடே போஸ்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல் தேய்க்காமல் இருந்தால் சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை அனைத்து நோய்களும் சிட்டு போல் பறந்துவிடும் என்று ஈரோட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக கூழானாலும் குளித்து குடி, கந்தலானாலும் கசக்கி கட்டு என்று கூறுவார்கள். குளிப்பது என்பதில் பல் தேய்த்தலும் அடங்கும். வாயில் உள்ள கிருமிகளாலும், பல் இடுக்குகளில் ஏற்படும் உணவுதுகள்களாலும் கிருமிகள் ஏற்பட்டு நமது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.

A poster which tells that not brushing teeth will cure all diseases

மருத்துவர்களும் காலை, இரவு இரு வேளைகளும் பல் துலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு பல் துலக்கினாலும் பல்லின் எனாமல் தேயும் அளவுக்கு தேய்க்க கூடாது என்கின்றனர்.

பல் துலக்கவில்லையெனில் வாய் துர்நாற்றம், வாயில் உள்ள கிருமிகள் உடலினுள் செல்வது உள்ளிட்டவை நிகழும். இந்நிலையில் பல் தேய்க்க வில்லை என்றால் சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தும் பறந்துவிடும் என்று கடந்த 2013-ஆம் ஆண்டு ஈரோட்டில் வெளியான போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் சுத்த மருத்துவர் புதின் நடத்தும் மருத்துவப் பயிலரங்கம் என்ற பெயரில் பல் வெளக்காதீங்க என்ற தலைப்புடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பயிலரங்கம் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறுவதாக ஒட்டப்பட்டிருந்தது. இந்த பயிலரங்கத்துக்கு 100 பேருக்கு மட்டும் அனுமதியாம். இதற்கு டிக்கெட் வேறு வாங்க வேண்டுமாம். கட்டணம் ரூ.300 செலுத்தினால் பல் வெளக்காதீங்கனு சொல்லிட்டு ஒரு டிவிடியையும் தருவாங்க போல.

இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு பிரஷ் யுவர் டீத் எவ்ரிடேனு சொல்லிக் கொடுப்பதோ போங்க.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A poster which was posted in Erode in 2013 is now goes viral. It shows that unbrushing teeth will lead to cure all severe diseases including cancer.
Please Wait while comments are loading...