"பப்ஜி அடிமை"! ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கைகளை துப்பாக்கியாக்கி விளையாடிய சிறுவன்! பெற்றோர் கண்ணீர்
நெல்லை: பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பள்ளி மாணவர் ஒருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது அரைமயக்கத்தில் கற்பனையிலேயே பப்ஜி விளையாட்டை விளையாடியதை பார்த்த அவரது பெற்றோர் மனவேதனை அடைந்தனர்.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாக செல்போன்கள் நவீனமயமாகி வரும் நிலையில் அதற்கேற்ப பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. ப்ளூவேல் கேம், ப்ரீ பயர் கேம், பப்ஜி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை பலர் விளையாடி வருகிறார்கள்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என எந்தவித வித்தியாசமும் இல்லாமல் ஆர்வமாகவே விளையாடி வருகிறார்கள்.

2 ஆண்டுகள்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையாடி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடல், பணியிடங்களுக்கு விடுமுறை உள்ளிட்டவைகளால் மக்களின் கேம் விளையாடும் ஆர்வம் அதிகரித்தது. இவை எல்லாம் மிகவும் ஆபத்தான கேம்களாகவே உள்ளன.

உயிர் குடிக்கும் எமன்
பலரது உயிர்களை குடிக்கும் எமன்களாக மாறி வருகின்றன. இது உளவியலுடன் தொடர்புடையது. மேலும் ப்ளூ வேல், பப்ஜியில் உன் கழுத்தை நீயே அறுத்துக் கொள் என்றால், அதை விளையாடுபவர்களும் செய்து உயிரை மாய்த்து கொள்கிறார்கள். இந்த விளையாட்டை விளையாடும் நபர்களுக்கு மிரட்டலும் வருகிறது.

கேமை விட முடியவில்லை
அதனால் அவர்களால் இந்த கேமை விட்டு பாதியில் போக முடியவில்லை. எப்போதும் கூட்டமாக இந்த கேமை விளையாடுகிறார்கள். அப்போது "அவனை சுடு, விடாதே, பிடி, அடித்து நொறுக்கு, தாக்கி போடு, அடிச்சி தூக்கு" என இவர்களுக்குள்ளாகவே கமென்ட்ரி கொடுத்து விளையாடுகிறார்கள்.

பாதிப்பு
இதனால் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் சொந்த வேலைகளையும் படிப்பையும் விட்டுவிட்டு சதா சர்வகாலமும் பப்ஜி விளையாட்டிலேயே ஐக்கியமாகிவிடுகிறார்கள். இதனால் இவர்கள் உடலளவிலும் மனதளவிலும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. திருநெல்வேலியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனை
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். என்னவென விசாரித்ததில் பப்ஜி ப்ரீ பயர் கேம் விளையாடி அதற்கு அடிமையாகி எப்போது பார்த்தாலும் அந்த கேம் விளையாடுவது போலவே செய்வதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுவனை ஸ்டெரெச்சரில் படுக்க வைத்த போது துப்பாக்கியால் சுடுவது போல் செய்கையையும் போனில் இரு விரல்களையும் கன்ட்ரோல் செய்வது போன்றும் ஏதோ பட்டனை தட்டுவதும் போன்று வெறும் கைகளாலேயே விளையாடி கொண்டிருந்தார். இதனால்தான் பெற்றோர் ஆரம்ப காலத்திலேயே கண்டித்து வையுங்கள் என மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications