எனக்கு ராவணன் மாதிரி தம்பிதான் வேணும்.. படித்ததில் பிடித்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு ராவணன் மாதிரியான சகோதரன்தான் வேண்டும் என்று ஒரு குழந்தை கூறுவது போன்ற செய்தி வாட்ஸ் ஆப்பில் வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் வந்த அந்த செய்தி:

A story which comes from Whatsapp

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள். "உனக்குத் தம்பி வேண்டுமா அல்லது தங்கை வேண்டுமா?"

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.

"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! அதனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Story which gives the truth of the life roaming in the internet.
Please Wait while comments are loading...