For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபாச பேச்சு.. கோவை பாரதியார் பல்கலை.பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்

ஆபாசமாக பேசியமாக பாரதியார் பல்கலை.பேராசியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை பாரதியார் பல்கலை பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்- வீடியோ

    கோவை: கோவை பாரதியார் பல்கலைகழக உளவியல் துறை தலைவர் ஆபாசமாக பேசியதாக, கேரள மாணவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணையை போலீசார் கையிலெடுத்துள்ளனர்.

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் முதுகலை அறிவியல் முதலாமாண்டு உளவியல் படித்து வந்தார். ஹரிதா பல்கலைகழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார்.

    a student complained to the professor at bharatiyar university

    இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 14 ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார். மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க பிரேமா மறுத்ததாகவும், விடுதியை பூட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதைதொடர்ந்து விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், வகுப்பறையில் மேஜை மீது நிற்க வைத்து தண்டித்ததாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், துறை தலைவர் வேலாயுதம் தனது அறைக்கு அழைத்து அறையினை பூட்டி ஆபாசமாக தகாத வார்த்தைகளினால் பேசியதாகவும், வலுகட்டாயமாக மாற்று சான்றிதழ் அளித்து பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றியதாகவும் மாணவி ஹரிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

    a student complained to the professor at bharatiyar university

    இதுதொடர்பாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் கடிதம் அளித்துள்ளார்.

    இந்த புகாரின் மீது வடவள்ளி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பான முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென வடவள்ளி காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

    மாணவி ஹரிதா புகார் அளித்துள்ள விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைகழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Kerala student has complained that the chairperson of the Kovai Bharatiyar University Psychological Department had misinterpreted her. Student has written a letter of complaint to the Governor. The police are investigating this issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X