எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவால் தொடரும் உயிரிழப்பு.. உதகையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதகை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் அலங்கார வளைவு அமைத்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அந்தந்தப் பகுதிகளில் பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப் பட்டு வருகின்றன. கோவையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக கடந்த மாதம் அவினாசி சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு அமைக்கப்பட்டது.

தொழிலாளி ஒருவர் பலி

தொழிலாளி ஒருவர் பலி

இதனால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ரகுபதி என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உதகை அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு அமைத்த போது தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அலங்கார வளைவு

அலங்கார வளைவு

உதகையில் நாளை மறுநாள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோடபந்து என்ற இடத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு அமைக்கப்பட்டது.

தொழிலாளி பலி - சோகம்

தொழிலாளி பலி - சோகம்

அப்போது எதிர்பாராதவிதமாக அலங்கார வளைவின் மீது மின்சாரம் பாய்ந்ததில் பாபு என்ற தொழிலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி

தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி

உயிரிழந்த தொழிலாளி பாபுவின் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவால் ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A worker died when Electricity hit the decorative curve of the MGR Century fuction set up in Ooty. last month a youth died in Coimbatore due to MGR century fuction decorative curve.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற