For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

30 வருஷமாச்சு நான் போட்டியிட்டு.. பாஜகவில் வேலூரை ' வென்ற' ஏ.சி.சண்முகம் நெகிழ்ச்சி

|

வேலூர்: பாஜக கூட்டணியில் இடம் பெற்றும் புதிய நீதிக் கட்சிக்கு தனியாக ஒரு சீட்டையும் அக்கட்சி தர முடியவிலல்லை. காரணம், தேமுதிக, பாமக படுத்திய பாட்டால். ஆனால அக்கட்சியைக் கைவிட்டுவிடாமல் தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வேலூரை புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகத்துக்கு கொடுத்து அழகு பார்த்துள்ளது பாஜக.

இதனால் சண்முகம் நெகிழச்சியுடன் காணப்படுகிறார். எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான இந்த கல்வியாளர் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறாராம்.

டெல்லியில் முகாமிட்டு சீட்டுக்காக கடுமையாக போராடி, ஒரு வவியாக வேலூரை வென்ற திருப்தியுடன் வேலூருக்கு வந்த சண்முகம் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது...

மோடிக்கு நன்றி

மோடிக்கு நன்றி

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் பாஜக 8 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் ஒரு தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இது வெற்றிக் கூட்டணி

இது வெற்றிக் கூட்டணி

7 கட்சிகள் கொண்ட இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம்

தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம்

புதிய நீதிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற பாடுபடுவார்கள்.

30 வருடத்துக்குப் பிறகு போட்டி

30 வருடத்துக்குப் பிறகு போட்டி

இத்தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிடுகிறேன்.

84ல் எம்.ஜி.ஆர். வாயப்பளித்தார்

84ல் எம்.ஜி.ஆர். வாயப்பளித்தார்

1984-ல் எம்ஜிஆர் அளித்த வாய்ப்பை அடுத்து இத்தொகுதியின் லோக்சபா உறுப்பினராகத் தேர்வு பெற்றேன்.

மக்கள் குறைகளைக் கேட்பேன்

மக்கள் குறைகளைக் கேட்பேன்

நான் இத்தொகுதி உறுப்பினராக இருந்தபோது 6 மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமம்தோறும் அதிகாரிகளுடன் சுற்றுப் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளேன். அதன் பிறகு எந்த மக்களவை உறுப்பினரும் இப்பணியைத் தொடரவில்லை.

மக்களுக்காகப் பாடுபடுவேன்

மக்களுக்காகப் பாடுபடுவேன்

நான் மீண்டும் இத்தொகுதி உறுப்பினரானதும், அப்பணியைத் தொடர்ந்து மக்களை நோக்கி அரசு அதிகாரிகளுடன் சென்று குறைகளைக் கேட்டு தீர்க்கப் பாடுபடுவேன் என்றார் ஏ.சி.சண்முகம்.

English summary
PNK leader A C Shanmugam is contesting in the LS election after a gap of 30 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X