கேளிக்கை வரி: முதலில் ஜென்டில்மேனாக கோரிக்கை வைப்போம்.. அப்புறம்.. ரஜினியை கோர்த்துவிடும் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். முதலில் கோரிக்கை வைப்போம் பிறகு பார்ப்போம் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள் மீது விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திரையங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து வருகின்றனர்.

Actor Kamal haasan thanks Rajinikanth on the issue of entertainment tax

இந்நிலையில் கேளிக்கை வரி தொடர்பாக நேற்று வாய்திறந்த ரஜினிகாந்த் கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கேளிக்கை வரி விவகாரம் தொடர்பாக ரஜினி டிவிட்டரில் கோரிக்கை விடுத்ததற்கு சக நடிகர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு உலக நாயகன் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஜென்டில்மேன்களை போல் முதலில் கோரிக்கை வைப்போம். பின்னர் பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal haasam thanks Rajinikanth on the issue of entertainment tax. Kamal thanked Rajini in his twitter page.
Please Wait while comments are loading...