மிகப்பெரிய எழுத்தாளர்.. பாலகுமாரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்- வீடியோ

  சென்னை: மிகப்பெரிய எழுத்தாளர் பாலகுமாரன் என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

  எழுத்துச் சித்தர் என்று அனைவராலும் போற்றிக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

  நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த பாலகுமாரன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகுமாரன் உயிர் பிரிந்தது.

  சிறுகதைகள், நெடுங்கதைகள்

  சிறுகதைகள், நெடுங்கதைகள்

  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமர்நேரியில் பிறந்தவர் பாலகுமாரன். 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகள் எழுதியுள்ளார்.

  கலைமாமணி விருது

  கலைமாமணி விருது

  நாயகன், குணா, ஜென்டில் மேன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கலைமாமணி விருது பெற்றுள்ள பாலகுமாரன், இலக்கிய சிந்தனை விருதும் பெற்றுள்ளார்.

  திரைத்துறையினர் அஞ்சலி

  திரைத்துறையினர் அஞ்சலி

  இலக்கியத் துறையினர், திரைத்துறையினர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  மிக நெருங்கிய நண்பர்

  மிக நெருங்கிய நண்பர்

  நடிகர் ரஜினிகாந்த் எழுத்தாளர் பாலகுமாரனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர்.

  மிகப்பெரிய எழுத்தாளர்

  மிகப்பெரிய எழுத்தாளர்

  மிகப்பெரிய எழுத்தாளர். பாட்ஷா படத்திற்கு பின் வேறு படத்திற்கு வசனம் எழுத வைக்க முயற்சித்தேன். அப்போது இலக்கியமும் ஆன்மிகமும் எனது உலகம் என கூறினார். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Rajinikanth paid tribute to writer Balakumaran. Rajini praises Balakumaran is a massive writer and my very close friend.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற