பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சினிமா டான்ஸர் ஜமுனாவுக்கு விஷால் செய்த உதவியை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிழைக்க வழியின்றி வயிற்று பசிக்காக சென்னை வடபழனி கோயிலில் பிச்சை எடுத்து பிழைத்து வரும் குரூப் டான்ஸர் ஜமுனாவுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்குப்படும் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா முன்னணி நாயகியாக இருந்த காலத்தில் குரூப் டான்ஸராக இருந்தவர் ஜமுனா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஔவையார், சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் குரூப் டான்ஸராக இருந்துள்ளார்.

Actor Vishal came forward to help Dancer Jamuna

தற்போது 80 வயதாகும் அவர் வடபழனி கோயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஜமுனாவின் கணவர் மேக்கப் மேனாக இருந்துள்ளார். சென்னையில் வசதியாக வாழ்ந்த இவர் கணவர் இறந்த பிறகு, குடும்பத்தாரால் கைவிடப்பட்டு பிச்சை எடுத்து வருகிறார்.

அவருக்கு சிவக்குமார், கமல் ஹாஸன் முன்பு பண உதவி செய்துள்ளனர். மீண்டும் அவர்களிடம் சென்று உதவி கேட்க அவர் விரும்பவில்லை. இந்நிலையில் பலருக்கும் உதவி செய்து வரும் நடிகர் விஷால் தனக்கு உதவ மாட்டாரா என்று ஜமுனா எதிர்பார்ப்பதாக நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதை அறிந்த நடிகர் விஷாலை ஜமுனாவுக்கு உதவ முன்வந்துள்ளார். பின்னர் மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி கிருஷ்ணனையும் ஜமுனாவை சந்திக்க அனுப்பினார். அப்போது ஜமுனாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவதாக கூறினர். அதை ஏற்க மறுத்து தனக்கு உதவித்தொகை வேண்டும் என்று கேட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மாதம் தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Vishal has come forward to help veteran group dancer Jamuna who begs at vadapalani temple.
Please Wait while comments are loading...