For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகளின் மரணத்துக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு நடிகர் விஷால் நேரில் ஆதரவு

மரணமடைந்த விவசாயிகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் விஷால் கலந்துகொண்டு, விவசாயிகளின் துயர் நீக்க கை கொடுப்போம் என கூறினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தொடர்ந்து நிலவும் வறட்சியின் பாதிப்பால், தற்கொலை செய்துகொண்டும் மாரடைப்பால் மரணமடைந்தும் வருகின்றனர் விவசாயிகள். சென்னையில் விவசாயிகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போரட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா தர மறுத்த காரணத்தால் டெல்டா பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகுவதைக் கண்டு பல விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டனர். பலர், நிலங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டு, 3 மாதங்களில் 250 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.

Actor Vishal took part in farmers protest in Chennai

மத்திய அரசு, தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு இதுவரை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது, உயிரிழந்த வெறும் 17 விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகை அளித்தார்.

தற்போது சென்னையில் விவசாயிகளின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் போரட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் நடிகர் விஷால் கலந்துகொண்டார். அப்போது விவசாயிகளின் துயர் நீக்க கை கொடுப்போம் என கூறினார்.

English summary
Last 3 months, 250 farmers died because of prevailing severe drought in Tamilnadu. Farmers are protesting in chennai demanding justice for died farmers. Actor Vishal took part in tjis protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X