பிக்பாஸ் முதல் நாளே காயத்ரி ரகுராமால் சர்ச்சை! #BigBossTamil

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று தொடங்கியது.

இதில் நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் உட்பட பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த பிரபலங்கள் நூறு நாட்களுக்கு வெளியுலக தொடர்பின்றி, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ள அறையிலேயே தங்க வேண்டும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தங்களது செல்போனை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என்பது முக்கியமான விதிமுறை.

டிவிட் செய்த காயத்ரி

இந்தநிலையில் காயத்ரி ரகுராம், நிகழ்ச்சியில் கமலோடு மேடையில் தோன்றியபோது, என்னை லைவாக பார்க்கலாம் என டிவிட் செய்திருந்தார்.

விதிமுறை மீறல்?

விதிமுறை மீறல்?

இணையதள தொடர்பு இருக்க கூடாது என்பதும் விதிமுறை. செல்போனையும் பயன்படுத்த முடியாது. இருப்பினும் எப்படி அவரது அக்கவுண்டிலிருந்து டிவிட் செய்யப்பட்டுள்ளது என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனை கொண்டுவந்தார்

செல்போனை கொண்டுவந்தார்

நெட்டிசன்கள் இதுகுறித்து கிண்டல் செய்து வருகிறார்கள். காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கை யார் பயன்படுத்தினார்கள், செல்போனை எதற்காக அரங்கத்திற்கு கொண்டுவந்தார் என்பது போன்ற பல கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

செல்போன்

சிலரோ அரங்கத்திலிருந்து அப்படியே செல்போன் வாபஸ் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று தங்கள் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Gayathri Rahuram got trolled by netizens for click her photo and share it in Twitter while she participated in Bigboss.
Please Wait while comments are loading...