For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏற்காடு வேட்பாளரை அறிவித்தார் ஜெ... மறைந்த எம்.எல்.ஏவின் மனைவி போட்டி

Google Oneindia Tamil News

ADMK fields late MLA's wife in Yercaud by poll
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை அறிவித்து விட்ட நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்த பெருமாளின் மனைவி சரோஜா, அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

ஏற்காடு எம்.எல்.ஏவாக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த பெருமாள். இவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை முதல் ஆளாக திமுக அறிவித்தது. பாமக போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. பல்வேறு கட்சிகள், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

ADMK Candidate Saroja

இந்த நிலையில் தற்போது அதிமுகவேட்பாளர் பெயரை ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் ஏற்காடு தனித் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவி சரோஜா போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கட்சியின் ஆட்சிமன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அங்கன்வாடியிலிருந்து அரசியலுக்கு வந்த சரோஜா

சரோஜாவுக்கு வயது 55 ஆகிறது. புளுதிக்குட்டை என்ற ஊரை சேர்ந்த வரதப்பகவுண்டர் என்பவரின் மகளான சரோஜா எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த 1975-ம் ஆண்டு, பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள் அவர்களை திருமணம் செய்தவுடன் தன்னுடைய அங்கன்வாடி ஆசிரியை வேலையை விட்டுவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு, 1980 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார் சரோஜா. 1992-1996, காலத்தில் பாப்பநாயக்கன் பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்துள்ளார்.

பெருமாள் - சரோஜா தம்பதியினருக்கு, ராஜேஷ்கண்ணா, சுரேஷ்கண்ணா, சதீஷ், கார்த்தி என நான்கு மகன்கள் உள்ளனர். இதில், ராஜேஷ்கண்ணா சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளராகவும், கருமந்துறை மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

இரண்டாவது மகன் ராஜேஷ்கண்ணா பாப்பநாயக்கன்பட்டியில் விவசாயம் செய்துவருகிறார், மூன்றாவது மகன் சதீஸ் தருமபுரி உதவி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். கடைசி மகனான கார்த்தி இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

தொகுதக்குப் புதியவரல்ல சரோஜா. மேலும் பெருமாள் மறைவால் ஏற்பட்டுள்ள அனுதாபமும் அவருக்கு வாக்குகளாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் உள்ளனர்.

English summary
CM Jayalalitha has named Saroja, wife of late Yercaud MLA Perumal as the candidate for the by poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X