அமமுகவுடன் அதிமுக சேர வேண்டும்.. சூலூர் கனகராஜ் அதிரடி பேட்டியால் பரபரப்பு!
கோவை: அதிமுகவும் அமமுகவும் சேர்ந்தால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் என சூலூர் எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்திக்க நேரம் கேட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த டிடிவி தினகரன் ஓபிஎஸ் தன்னை சந்திக்க நேரம் கேட்டது உண்மைதான் என்றார். மேலும் தங்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியதற்கு ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டதாகவும் தினகரன் தெரிவித்தார்.

அதிமுக மறுப்பு
தினகரனின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமமுகவினரின் குற்றச்சாட்டுகளையும் கருத்துக்களையும் அதிமுக நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

உற்சாகமாக உள்ளது
இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான கனகராஜ் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள கருத்து கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு எங்களை போன்ற தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

அதிமுக-அமமுக சேரவேண்டும்
திமுகவை வேர் அறுக்க அதிமுக- அமமுக ஒன்று சேரவேண்டும். விரைவில் இரு கட்சி தலைமையும் நல்ல முடிவை எடுத்து தொண்டர்களுக்கு அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆட்சியை காப்பாற்ற முடியும்
அதிமுக - அமமுக சேர்ந்தால்தான் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும். தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருக்கலாம். அப்படி கேட்டிருந்தால் அதில் தவறு இல்லை.

ஓபிஎஸ் முயற்சி
அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் தினகரனை கட்சியில் சேர்த்து வலுப்படுத்துவார்கள். இரு கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் ஓபிஎஸ் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

கூடுதல் குழப்பம்
குருபெயர்ச்சி வந்தவுடன் அதிமுகவிற்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது என்றும், அனைத்து அணிகளும் ஒன்று சேர்ந்தால்தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும். இவ்வாறு சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு கட்சிக்குள் கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications