காலையில் ஆசுவாசம்.. இப்ப வெளுத்து வாங்க ஆரம்பிச்சிருச்சுப்பா மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  சென்னை: சென்னையில் காலை வரை ரெஸ்ட் எடுத்து வந்த மழை தற்போது மீண்டும் பெய்ய ஆரம்பித்து விட்டது.

  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 4 நாள்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இலங்கைக்கு தென்மேற்கு வங்க கடல் பகுதியில், நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று நகர்ந்து, தற்போது, இலங்கைக்கும், தமிழக கடலோர பகுதிகளுக்கும் இடையே நிலை கொண்டிருப்பதால் மேலும் இரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

  Again rain starts in Chennai

  இந்நிலையில் வளசரவாக்க,ம் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா, சேப்பாக்கம், முகப்பேர், அண்ணாநகர், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் பலத்த மழை கொட்ட தொடங்கிவிட்டது.

  ஏரிகளின் கொள்ளளவு நிரம்பும் நிலையில் மேலும் மேலும் மழை கொட்டுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Most of the places in Chennai, rain starts again. Some places are hot.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X