நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...அதிமுக தர்ம யுத்தத்தின் பார்ட்-2 "கடித யுத்தம்" விரைவில் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரனை நம்பி ஏமாந்து விட்டோமோ என்ற கலக்கத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்- வீடியோ

  சென்னை: அதிமுகவில் தர்ம யுத்தம் ரகளைகள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஓபிஎஸ் அணியில் உள்ள அதிருப்தி தலைவர்கள் கடித யுத்தம் நடத்த வியூகம் வகுத்துள்ளனராம்.

  அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இரு அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லையே என மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் என பலரும் கொந்தளித்தனர்.

  இந்த நிலையில் இரட்டை இலை தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வந்தது. இதனால் அதிருப்தி அலை சற்று ஓய்வெடுத்தது.

  மதுசூதனன் தோல்வி

  மதுசூதனன் தோல்வி

  ஆர்.கே.நகர் தேர்தல் வந்ததால் ஓபிஎஸ் அணியினர் ரொம்பவே அமைதி காத்து வந்தனர். ஆர்.கே.நகர் தேர்தலில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனை ஈபிஎஸ் அணியின் ஜெயக்குமார் தோற்க செய்துவிட்டதால் இப்போது மீண்டும் கலகம் வெடித்திருக்கிறது.,

  7 நாட்கள் கெடு

  7 நாட்கள் கெடு

  இதன் முதல்கட்டமாக ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் மதுசூதனன். அதில் 7 நாட்கள் கெடுவையும் விதித்திருக்கிறார் மதுசூதனன். ஜெயக்குமார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் எனத் தெரிந்தும் மதுசூதனை ஓபிஎஸ் அணி தலைவர்கள் தூண்டிவிட்டு கடிதம் எழுத வைத்துள்ளனர்.

  அடுத்தடுத்து கடிதம்

  அடுத்தடுத்து கடிதம்

  இந்த கடித விவகாரம் பெரும் பரபரப்பாகிவிட்டது. இதனை பயன்படுத்தி ஓபிஎஸ் அணியில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஈபிஎஸ்-க்கு ஏதாவது ஒரு பிரச்சனையை முன்வைத்து கடிதம் அனுப்பிக் கொண்டே இருக்கலாம் என திட்டமிட்டுள்ளனராம்.

  தர்மயுத்தம் பார்ட் -2

  தர்மயுத்தம் பார்ட் -2

  இப்படி கடித யுத்தம் நடத்தினால் தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது போல் தங்களுக்கு வாரியத் தலைவர் போன்ற ஏதாவது பதவி கிடைத்துவிடும் என்பதுதான் கணக்காம். அதனால் தர்ம யுத்தத்தின் 2-வது பாகமாக கடித யுத்தத்தை விரைவில் ரிலீஸ் செய்ய போகிறதாம் ஓபிஎஸ் டீம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  According to the sources AIADMK factions will release the part two of their Dharmayutham in the name of "Kadithayutham".

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற