ஜெ. பட திறப்பு விவகாரத்தில் வெளியே வந்தது பூனைக் குட்டி... அதிமுகவின் ஸ்லீப்பர் செல் விஜயதாரணி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்- வீடியோ

  சென்னை: ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது குறித்த விவகாரத்தில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி என கட்சி தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளன.

  சட்டசபையில் ஜெயலலிதா படம் நாளை திறக்கப்படுகிறது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கின் குற்றவாளி ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியோ, ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கலாம் என ஆதரவு தெரிவித்திருந்தார்.

  திருநாவுக்கரசர் எதிர்ப்பு

  திருநாவுக்கரசர் எதிர்ப்பு

  இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், ஜெயலலிதா படத் திறப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  விஜயதாரணிக்கு பதிலடி

  விஜயதாரணிக்கு பதிலடி

  மேலும் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கும் எனவும் திருநாவுக்கரசர் கூறியிருந்தார். ஜெயலலிதா படத் திறப்புக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி ஆதரவு தெரிவித்த நிலையில் கட்சி அதை நிராகரித்திருக்கிறது.

  வெல்லும் என நம்பிக்கை

  வெல்லும் என நம்பிக்கை

  சட்டசபையில் பெரும்பான்மை இல்லை என்பதை எடப்பாடி அரசு உணர்ந்தே இருக்கிறது. இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நேரிட்டால் வெல்வோம் என்கிற நம்பிக்கையிலும் இருக்கிறது எடப்பாடி.

  கட்சி தலைமையில் புகார்

  கட்சி தலைமையில் புகார்

  ஏனெனில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரையும் அதிமுக வளைத்துவிட்டோம்; அந்த ஸ்லீப்பர் செல்கள் இக்கட்டான நேரத்தில் உதவும் என்கிற நம்பிக்கைதான் என கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக அரசுக்கு விஜயதாரணி ஆதரவு இருக்கிறது என கட்சி தலைமையிடம் புகார் வாசிக்கத் தொடங்கிவிட்டனர் எதிர்கோஷ்டியினர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TNCC President Thirunavukkarasar also opposed to unveiled Jayalalithaa Portrait in TamilNadu Assembly.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற