அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஸ்டாலினிடம் தங்க மோதிரம் பரிசு பெற்ற பெண் !
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் வளர்த்த காளைக்காக பரிசுகளை அள்ளினார்.
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்க மறுத்து சீறி பாய்ந்த காளையை வளர்த்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மோதிரம் பரிசு அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் சிறு வயது முதல் தனது வீட்டில் காளைகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்த காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் சீறிபாய்ந்தது. இதனை அடுத்து மாட்டின் உரிமையாளரான ரேணுகாதேவிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனடியாக மு.க.ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். அப்போது ரேணுகாதேவிக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் ஸ்டாலின். தவிர விழா கமிட்டி சார்பில் அண்டா, பட்டுப்புடவை, சைக்கிள், டிராவல் பேக் என பரிசுப்பொருட்களை மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கைநிறைய அள்ளிச்சென்றனர்.
இந்த போட்டியில் 11 காளைகளை அடக்கிய விமல்ராஜூக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி காளைக்கு கார் பரிசளிக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications