For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Bulls are not wild animals.. அதிரடியாக பேசிய அலங்காநல்லூர் வீரத் தமிழச்சி!

காளைகளை நாங்கள் எப்படி வளர்க்கிறோம் என்பதை பீட்டாக்காரர்கள் இங்கு வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண் கூறினார்.

Google Oneindia Tamil News

மதுரை: காளைகள் வீட்டு விலங்குகள், காட்டு விலங்கு அல்ல. அதை எப்படி வீடுகளில் வளர்க்கிறோம் என்பதை பீட்டா அமைப்பினர் இங்கு வந்து தங்கிப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் வீர உரையாற்றியது அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியுள்ளது.

Alanganallur woman's poser to PETA

அலங்காநல்லூர் மக்கள் குறிப்பாக பெண்கள் படை முன்பை விட அதிக பலத்துடன் உறுதி குலையாமல் தொடர்ந்து வீராவேசமாக போராடிக் கொண்டுள்ளனர். அவசரச் சட்டம் எங்களுக்குத் தேவையில்லை. நிரந்தர சட்டம் தான் தேவை என்று கூறி அவர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் போராடிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சன் செய்திகளுக்கு ஒரு அலங்காநல்லூர் அளித்த பேட்டி பலரையும் கவர்ந்துள்ளது. கிராமப்புற பெண்கள் என்றாலே இளக்காரமாக பார்க்கும் பீட்டா போன்ற பீட்டர் பாட்டிகளுக்கு இந்தப் பெண் அழகான ஆங்கிலத்தில் பேசியது நிச்சயம் சகிக்க முடியாத விஷயமாகத்தான் இருக்கும்.

அப்பெண் பேசுகையில், 3 வருடமாக போராடிக் கொண்டுள்ளோம். 3 வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சிறு கிராமமாக அலங்காநல்லூர் கிராம மக்களின் கோரிக்கையாக இது இருந்தது. இன்று உலகமே எங்களுக்காகப் போராடுகிறது. இதுவரை திரும்பிப் பார்க்காத அரசுகள் இப்போது அவசரச் சட்டத்துடன் வந்துள்ளன. இதற்குக் காரணம் தமிழர்களின் ஒற்றுமைதான்.

Alanganallur woman's poser to PETA

தமிழிர்கள் விழித்துக் கொண்டு விட்டனர். ஆட்சியாளர்கள் இப்போதுதான் இதை உணர்ந்து உள்ளனர். அதன் வெளிப்பாடுதான் அவசரச் சட்டம். ஆனால் இது எங்களுக்கு வேண்டாம். அதில் உடன்பாடும் இல்லை. திருப்தியும் இல்லை. நிரந்தரச் சட்டமே எங்களுக்குத் தேவை.

எந்த ஆட்சி வந்தாலும், எந்த ஆண்டு வந்தாலும், எந்த அமைப்பு வந்தாலும் ஜல்லிக்கட்டை நிறுத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு தரும் சட்டம்தான் தேவை. எந்த வகையிலும் மாற்றம் இருக்காத, சுதந்திரமான முறையில் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடிய வகையிலான சட்டம்தான் தேவை.

குறிப்பிட்ட தேதியில் வருடா வருடம் தங்கு தடையின்றி ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்த வேண்டும். அந்த சட்டம்தான் வேண்டும். அதுதான் தேவை. பீட்டா அமைப்பு கூறுகிறது காளைகள் வீட்டு விலங்குகள் இல்லை என்று. Bulls are not wild animals, they are pet animals. Because we are taking care of them very well. We are raising them in our homes. முதல்வரின் அறிவிப்பை நாங்கள் ஏற்கவில்லை. அதை எதிர்த்து எங்களது போராட்டம் தொடருகிறது என்றார் அப்பெண்.

ராதா ராஜன் போன்ற பெண்களை கேவலமாக விமர்சிக்கும் விலங்குகள் நல, பீட்டா கோஷ்டிகளின் காதுகளை இந்தப் பெண்ணின் பேச்சு போய் நன்றாக அறையட்டும்!

English summary
An Alanganallur woman has posed questions to PETA Jallikatu and raising the bulls. She slammed the PETA that bulls are not wild animals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X