For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதி போட்டி.. ஏராளமானோர் பங்கேற்பு

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதி போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதி போட்டி.. ஏராளமானோர் பங்கேற்பு-வீடியோ

    கோவை: கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை சுங்கவரி துறை அணியும் பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணியும் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றன.

    கடந்த 26-ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 20 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை சுங்கவரி துறை அணியை எதிர்த்து டெல்லி இந்தியன் ரயில்வே அணியுடன் விளையாடியது.

    all indian basketball tournaments in coimbatore

    இதில் சென்னை சுங்கவரி துறை அணி 69-63 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த டெல்லி இந்தியன் ரயில்வே அணிக்கு 50,000 ரூபாயும் டாக்டர் மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது.

    அதேபோல, பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணி 59-43 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற கேரள மின்வாரிய அணிக்கு முதல் பரிசாக 50,000 ரூபாய் மற்றும் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த நம்பிக்கைக்கான விளையாட்டு வீராங்கணை விருது தமிழ்நாடு ஜூனியர்ஸ் வீராங்கணை எஸ்.கிருத்திகாவிற்கு வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் துணை ஆனையர் தர்மராஜன் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட கூடைபந்து கழக தலைவரும் சி.ஆர்.ஐ குழுமங்களின் இணை நிர்வாக இயக்குனருமான செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    English summary
    All Indian basketball tournaments were held in Coimbatore. In the men's section, the Chennai Customs Department team and Women's Division were won by Kerala Electricity Board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X