உடல் மினுமினுக்க வேண்டுமா.. வாட்ஸ் அப் தகவலை நம்பி.. செங்காந்தள் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பலி!
திருப்பத்தூர்: வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி உடலை மினுமினுப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காக செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஆம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் எத்தனை வளர்ச்சி அடைந்தபோதிலும், நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மனதில் அறியாமை மட்டும் இன்னும் விலகவே இல்லை. யார் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பும் மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். இதில் படித்தவர், படிக்காதவர் பேதம் கிடையாது என்பதுதான் சிக்கலே. உள்ளூர் முதல் உலக நடப்புகள் வரை யாரோ ஒருவர் கூறியதை மறு ஆய்வு செய்யாமல் அப்படியே நம்பும் வழக்கம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
அதுவும் வாட்ஸ் அப்பில் வந்துவிட்டால் போதும், மறு அப்பீலே தேவை இல்லை. ஏதோ தெய்வ வாக்கு போல அதை அவர்கள் நம்பி விடுவார்கள். அவர்கள் நம்பியதோடு மட்டுமல்லாமல், அது நூறு சதவீதம் உண்மை என்பதை போல மற்றவர்களிடமும் கூறுவார்கள். இவ்வாறு பல மருத்துவக் குறிப்புகள் கூட வாட்ஸ் அப்பில் உலா வருவதுதான் கொடுமை. ஒற்றை தலைவலியா.. இந்த மூலிகையை சாப்பிடுங்கள் என்ற ரீதியில் வரும் வாட்ஸ் அப் தகவல்களை நம்பி உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏராளம். அதுபோன்ற ஒரு விபரீத சம்பவம்தான் ஆம்பூரில் நடந்துள்ளது.

"மூலிகை விரும்பி.."
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். இவர் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. சமூக வலைதளங்களை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றில் வரும் மருத்துவக் குறிப்புகள், அழகு குறிப்புகள் ஆகியவற்றை அப்படியே செய்து வந்துள்ளார். மேலும், இயற்கை மூலிகைகள், கசாயங்கள் பற்றி வாட்ஸ் அப்பில் வந்துவிட்டால், அதை நிச்சயம் உட்கொண்டு விடுவாராம்.

'செங்காந்தள் கிழங்கு சாப்பிட்டால்..'
அந்த வகையில், கடந்த வாரம் லோகநாதனின் வாட்ஸ் அப்புக்கு ஒரு ஃபார்வேர்டு மெசேஜ் வந்துள்ளது. அதில் செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாக மாறும் எனக் கூறப்பட்டிருந்தது. விடுவாரா லோகநாதன். உடனடியாக செங்காந்தள் செடியை தேடி சுற்ற ஆரம்பித்தார். ஒருவழியாக அந்த செடியையும் அவர் கண்டுபிடித்து விட்டார்.

ஏறியது விஷம்..
இதையடுத்து, இந்த விஷயம் குறித்து தனது நண்பரான ரத்தினம் (35) என்பவரிடமும் லோகநாதன் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று செங்காந்தள் பூச்செடியில் உள்ள கிழங்கை பச்சையாக சாப்பிட்டனர். இதை அவர்கள் வீடியோவும் எடுத்தனர். இந்நிலையில், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு வாந்தியும், தலைச்சுற்றலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பயந்துபோன அவர்கள் தங்கள் உறவினர்களிடம் நடந்த விஷயத்தையும், தாங்கள் இருக்கும் இடத்தையும் தெரிவித்துள்ளனர்.

மரணம் - கவலைக்கிடம்..
இதன்பேரில், உடனடியாக அங்கு வந்த அவர்களின் உறவினர்கள் இருவரையும் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் லோகநாதன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ரத்தினத்தின் உடல்நிலையும் மோசமானதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications