For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பென்னாகரத்தில் களமிறங்கும் அன்புமணி ராமதாஸ்... மேட்டூரில் ஜி.கே.மணி!

Google Oneindia Tamil News

சென்னை: பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய தர்மபுரி எம்.பியுமான அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பாமக. தொடர்ந்து தேர்தல் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Anbumani Ramadoss contesting in Pennagaram

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது. அதனைத் தொடர்ந்து 90 தொகுதிகளுக்கான அக்கட்சியின் 3வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக அன்புமணி பதவி வகித்து வருகிறார். முதன்முறையாக தற்போது அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மேட்டூர் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணியும், வந்தவாசியில் வடிவேலு ராவணனும் போட்டியிடுவதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலோடு சேர்த்து இதுவரை 207 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The PMK chief minister candidate Anbumnai Ramadoss is contesting in Pennagaram assembly constituency in Dharmapuri district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X