For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து உபரியாக திறந்து விடப்பட்டு கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைத்தால் பல மாவட்டங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றலாம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேட்டூர் அணை உபரி நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

Anbumani Ramadoss Mettur Dam Excess Water Management Plan

மேட்டூர் அணையை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, 83 ஆண்டுகளில் 42 முறை மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், தண்ணீர் வீணாக கடலில் கலந்தது என்று கூறியுள்ளார்.

மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால் 30 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக விவசாயம் செய்யலாம்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கலாம். பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கடலில் கலக்கிறது. எனவே மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்திற்கு தேவை வெறும் 5 டிஎம்சி தண்ணீர் தான். நீரேற்று மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

English summary
PMK Anbumani Ramadoss has Startd a awareness campaign for speedy implementation of Mettur Dam Excess Water Management Plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X